search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழங்கும்"

    • கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அளுக்குளி திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 288 குடியிரு ப்புகளை மேலாண்மை இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • மேலும் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் அருகாமையில் உள்ள ேரஷன் கடை பற்றிய விபரங்களை மக்களிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 30 திட்டப்பகுதிகளில் 11,890 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அதில் 1,184 குடியிருப்புகள் முடிவுற்று 997 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு குடியேற்றப் பட்டுள்ளார்கள்.

    பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 7689 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 6316 கட்டிட பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அளுக்குளி திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 288 குடியிரு ப்புகளை ஆய்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புதாரர்களிடம் குறைகளை கேட்டறிந்து உடன் சரிசெய்ய அதிகாரி களிடம் அறிவுறித்தினார்.

    மேலும் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் அருகாமையில் உள்ள ேரஷன் கடை பற்றிய விபரங்களை மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஈரோடு மாநகராட்சி க்குட்பட்ட பவானி சாலை பகுதி திட்டப்பகுதியில் அனை வருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் 336 குடியிருப்புகள் கட்டும் பணிகளைஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பெரும்பள்ளம் ஓடை, கருங்கல்பாளையம் மற்றும் பெரியார் நகர் திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 1072 குடியிருப்புகளை ஆய்வு செய்து குடியிருப்புகளை பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைக்க வீட்டுவசதி துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள ஆலமரத்து மேடு திட்டப்பகுதியில் ஆய்வு செய்து மக்களிடம் கலந்துரையாடி நிலுவை தொகையினை செலுத்தி விற்பனை பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுருத்தினார்.

    மேலும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டப்பணிகளைஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பரமத்தி வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும், வீல்சேர், தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து பரமத்திவேலூர் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் பழனிவேல் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

    பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர்சோமசேகர் முன்னிலை வகித்தார். 14-வது வார்டு உறுப்பினர் முருகன், ஹேமாமாலினி, செம்பருத்தி ஆகியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் சுரேஷ் வரவேற்று பேசினார்.

    விழாவில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும், வீல்சேர், தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முடிவில் பரமத்திவேலூர் மாற்றுத்திறனாளி நல சங்க செயலாளர் சதீஸ் நன்றி கூறினார்.

    பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நாமக்கல்:

    நாட்டில் உள்ள அனைத்து ஏழை மக்களும் கான்கிரீட் வீடுகள் கட்டுதல் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் பாரத பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டம் 2016 -2017-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டம் 2021 - 2022 -ன் கீழ் வீடுகள் கட்டி வரும் பயனாளிகளிடம் அவர்கள் வீட்டிற்காக அரசினால் வழங்கப்படும். தொகை ரூ.2.277,290- குறித்தும் வீடுகள் அளவீடுகள் துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மூட்டைகள். இரும்பு கம்பிகள் குறித்தும் பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசிடமிருந்து 2021 2022ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிட 3213 கையேடுகள் வரப்பெற்றுள்ளது.

    பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடுகள் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காதப்பள்ளி, எர்ணாபுரம், மாரப்பநாயக்கன்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு கையேடுகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வழங்கினார்.

    வரப்பெற்ற கையேடுகள் ஒன்றியங்களில் வட்டாரங்களுக்கு உள்ள பிரித்து ஊராட்சிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. இக்கையேட்டின் மூலம் பயனாளிகள் தங்கள் வீடு கட்டுவது குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள இயலும் பயனாளிகளுக்கும் இக்கையேடு இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதில் மிகவும் பயனள்ளதாக இருக்கும்.

    ×