மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா

பரமத்தி வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும், வீல்சேர், தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்த படம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து பரமத்திவேலூர் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் பழனிவேல் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர்சோமசேகர் முன்னிலை வகித்தார். 14-வது வார்டு உறுப்பினர் முருகன், ஹேமாமாலினி, செம்பருத்தி ஆகியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பரமத்திவேலூர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் சுரேஷ் வரவேற்று பேசினார்.

விழாவில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும், வீல்சேர், தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முடிவில் பரமத்திவேலூர் மாற்றுத்திறனாளி நல சங்க செயலாளர் சதீஸ் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com