search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருவாய்த் துறை"

    • அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் அதில் கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • ஒரு சில இடங்களில் சிலர் தங்களிடம் இடத்திற்கான 300 வருட பத்திரங்கள் மற்றும் பட்டா உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    பரங்கிமலை மற்றும் பல்லாவரம் கண்டோன் மென்ட் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அதில் பல ஆண்டு காலமாக கட்டிடங்கள் இயங்கி வருவதாகவும் செங்கல்பட்டு கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் அதில் கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    கோர்ட்டு உத்தரவுப்படி வருவாய்த் துறையினர் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து பல்லாவரம் தாசில்தார் தலைமையில் போலீசார் உதவியுடன் அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்கத்தொடங்கினர். ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கட்டிடங்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. பின்பு ஆக்கிரமித்த கட்டிடங்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதில் தனியார் வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், விளையாட்டுக் கிளப்புகள், வர்த்தக கட்டிடங்கள், ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடங்கும்.

    பரங்கிமலை மற்றும் கண்டோன்மெண்ட் சுற்றியுள்ள பகுதிகளில் அரசுக்கு சொந்தமான சுமார் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 15 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    மீட்கப்பட்ட இந்த இடங்களில் அரசு கட்டிடம் மற்றும் மெட்ரோ ரெயில் பணிகளுக்கான இடம், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றலாம் என்று வருவாய்த்துறை மூலமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

    ஆலந்தூரை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ஆலந்தூர் மற்றும் பரங்கிமலை ரெயில் நிலைய பகுதியில் வாகனம் நிறுத்தும் இடங்கள் நாள்முழுவதும் நிரம்பி வழிகிறது. வாகன நிறுத்தும் இடம் அமைப்பதால் இந்த பிரச்சினையை தீர்ப்பதுடன், அரசு போதிய வருவாயும் ஈட்ட முடியும் என்றார்.

    ஆனால் பரங்கிமலை பகுதியில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ள ஒரு சில இடங்களில் சிலர் தங்களிடம் இடத்திற்கான 300 வருட பத்திரங்கள் மற்றும் பட்டா உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர். இது போன்ற ஆவணம் அதிகாரிகளிடம் இல்லை. இதனால் வருவாய் துறை அதிகாரிகள் தவறாக சீல் வைத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • விவசாயி தானமாக கொடுத்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
    • 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிலாஸ்பூர்:

    இமாச்சல பிரதேசத்தில் விவசாயி ஒருவர் 3 ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    பிலாஸ்பூர் மாவட்டம் கார்சி சவுக் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாகீரத் சர்மா (வயது 74), சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவரது நான்கு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார், மற்றொரு மகன் டாக்சி டிரைவராக உள்ளார்.

    இந்நிலையில், அவரது கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில் வருவாய்த் துறையின் கணக்காளர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் தேவைப்பட்டது. நிலம் வாங்குவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதை அறிந்த விவசாயி பாகீரத் சர்மா, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, வருவாய்த்துறைக்கு தனது 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    அந்த அலுவலகம் கட்டப்பட்டால் 12 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சாதாரன நிலத் தகராறுகளால் சண்டை ஏற்பட்டு சில நிமிடங்களில் உறவுகள் முறியும் இந்த காலகட்டத்தில், பாகீரத் சர்மா, ஒரு முன்மாதிரியாக விளங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆத்மதேவ் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ×