search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட மாநில வாலிபர் கைது"

    • வாலிபர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
    • அவரை கைது செய்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள மாரியப்பா நகர் என்ற இடத்தில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அந்த வாலிபர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    மேலும் அவரை விசாரித்த போது அந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் (30) என தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 600 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சண்முகம் தனது மேஜையை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததால் சதீஷ்குண்டுவை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியாருக்கு சொந்தமான டெக்ஸ்டைல் நிறுவனத்தில் ஒரு பிரிவின் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகம் (வயது 29).

    இவர் தனது அலுவலகத்தில் உள்ள மேஜையில் ரூ.5 ஆயிரத்தை வைத்துவிட்டு தனது வருகையை பதிவு செய்ய சென்று விட்டார். பின்னர் பணத்தை சூப்பர்வைசராக வேலை செய்யும் சுஜித்குமார் மாலிக் என்பவருக்கு தர அவரையும் அழைத்துக்கொண்டு தனது அலுவலக அறைக்கு வந்தார்.

    அப்பொழுது அவருடைய அறையில் இருந்து கையில் பணத்துடன் அந்த கம்பெனியின் மிஷின் ஆபரேட்டராக வேலை செய்யும், உத்திரபிரதேசம் மாநிலம் கேராம் குடவா பகுதியை சேர்ந்த சதீஷ்குண்டு (வயது 25) வெளியே வந்துள்ளார்.

    உடனடியாக சண்முகம் தனது மேஜையை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததால், உடனடியாக சத்தம் போட்டு அங்கிருந்த சூப்பர்வைசர் கோடீஸ்வரன் மற்றும் சுஜித்குமார் மாலிக் ஆகியோர் உதவியுடன் சதீஷ்குண்டுவை கையும் களவுமாக பிடித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×