என் மலர்
முகப்பு » North State teenager arrested for
நீங்கள் தேடியது "North State teenager arrested for"
- வாலிபர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
- அவரை கைது செய்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள மாரியப்பா நகர் என்ற இடத்தில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அந்த வாலிபர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அவரை விசாரித்த போது அந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் (30) என தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 600 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
×
X