search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேச முன்னாள் பிரதமர்"

    வங்காளதேசம் நாட்டு பாராளுமன்றத்துக்கு வரும் டிசம்பர் 23-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தேதியில் இன்று திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #Bangladeshelection
    டாக்கா:

    வங்காளதேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நுருல் ஹூடா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    300 உறுப்பினர்களை கொண்ட வங்காளதேசம் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் நவம்பர் 19-ம் தேதி எனவும்,  வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 29-ம் தேதி எனவும் அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் நுருல் ஹூடா கடந்த 8-11-2018 அன்று அறிவித்திருந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்திருந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேசம் தேசியவாத கட்சி இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது.

    ஜாட்டியா ஓய்க்கியா முன்னணியில் இணைந்து இந்த தேர்தலை எதிர்கொள்வதாக சிறையில் இருக்கும் கலிதா ஜியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கேற்ப தேர்தல் தேதியை ஒருமாதத்துக்கு பிறகு ஒத்திவைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் 23-ம் தேதிக்கு பதிலாக 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களின் கண்காட்சியை இன்று பார்வையிட்ட தலைமை தேர்தல் ஆணையர் நுருல் ஹூடா அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். #Bangladeshelection
    ×