search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லேப்டாப் திருட்டு"

    • தகாத வார்த்தைகளால் திட்டி அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினர். மேலும் வீட்டிற்கு பூட்டுபோடப்பட்டது.
    • இந்தநிலையில் பூட்டைஉடைத்து வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் பணம் ரூ.50ஆயிரத்தை 4 பேரும் திருடிச்சென்றதாக சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி தவமணி. இவர் அதேபகுதியை சேர்ந்த நாகம்மாள் என்பவருக்கு கிரைய விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்துள்ளார். இதில் பாதி பணம் கொடுத்துவிட்டு மீதி பணம் தராததால் உத்தமபாளையம் கோர்ட்டில் வழக்குதொடரப்பட்டது.

    இந்த நிலையில் தவமணியை நாகம்மாள், அழகுபிரியா, அழகுராணி, ராஜாராம் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினர். மேலும் வீட்டிற்கு பூட்டுபோடப்பட்டது. இந்தநிலையில் பூட்டைஉடைத்து வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் பணம் ரூ.50ஆயிரத்தை 4 பேரும் திருடிச்சென்றதாக தவமணி சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு புகுந்து லாக்கரில் இருந்த தங்க நகைகள், வெள்ளி கொலுசு, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    • சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் சீலையம்ப ட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்பாண்டியன் (வயது 33). இவர் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் சென்றார். மீண்டும் ஊர் திரும்பிய போது வீட்டில் மேல்மாடி கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிக்கிடந்தன.

    அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த தங்க சங்கிலி வளையல் உள்பட 6 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ராயபுரம் பகுதியை சேர்ந்த காந்தன் என்பவர் அதே பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றில் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
    • தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை துறைமுகம் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    ராயபுரம்:

    சென்னை துறைமுகத்தில் பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ராயபுரம் பகுதியை சேர்ந்த காந்தன் என்பவர் அதே பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றில் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் துறைமுகம் காவல் நிலையத்தில் கடந்த 6-ந் தேதி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லேப்டாப்களை தனது நிறுவனம் மூலமாக சி.ஐ.டி.பி.எல். என்ற யார்டில் கண்டெய்னரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாகவும், அதன் பிறகு அந்த கண்டெய்னர் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து 27 லேப்டாப்கள் திருடு போனதாகவும் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டையார் பேட்டையை சேர்ந்த முத்துக்குமார் என்ற நபரை அன்றே கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு லேப்டாப்கள் மற்றும் அவர் பயன்படுத்திய லாரி ஒன்றை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

    அதன் பிறகு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை துறைமுகம் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஷேக் தாவூத், ரமேஷ் மற்றும் எர்ணாவூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 23 லேப்டாப்களை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×