search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரியில் பூட்டை உடைத்து லேப்டாப் திருட்டு- 3 பேர் கைது
    X

    சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரியில் பூட்டை உடைத்து லேப்டாப் திருட்டு- 3 பேர் கைது

    • ராயபுரம் பகுதியை சேர்ந்த காந்தன் என்பவர் அதே பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றில் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
    • தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை துறைமுகம் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    ராயபுரம்:

    சென்னை துறைமுகத்தில் பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ராயபுரம் பகுதியை சேர்ந்த காந்தன் என்பவர் அதே பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றில் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் துறைமுகம் காவல் நிலையத்தில் கடந்த 6-ந் தேதி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லேப்டாப்களை தனது நிறுவனம் மூலமாக சி.ஐ.டி.பி.எல். என்ற யார்டில் கண்டெய்னரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாகவும், அதன் பிறகு அந்த கண்டெய்னர் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து 27 லேப்டாப்கள் திருடு போனதாகவும் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டையார் பேட்டையை சேர்ந்த முத்துக்குமார் என்ற நபரை அன்றே கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு லேப்டாப்கள் மற்றும் அவர் பயன்படுத்திய லாரி ஒன்றை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

    அதன் பிறகு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை துறைமுகம் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஷேக் தாவூத், ரமேஷ் மற்றும் எர்ணாவூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 23 லேப்டாப்களை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×