என் மலர்
நீங்கள் தேடியது "Jewelery and laptop theft"
- வீடு புகுந்து லாக்கரில் இருந்த தங்க நகைகள், வெள்ளி கொலுசு, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
- சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே சின்னமனூர் சீலையம்ப ட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்பாண்டியன் (வயது 33). இவர் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் சென்றார். மீண்டும் ஊர் திரும்பிய போது வீட்டில் மேல்மாடி கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிக்கிடந்தன.
அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த தங்க சங்கிலி வளையல் உள்பட 6 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






