சின்னமனூரில் வீடு புகுந்து பணம், லேப்டாப் திருட்டு

தகாத வார்த்தைகளால் திட்டி அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினர். மேலும் வீட்டிற்கு பூட்டுபோடப்பட்டது. இந்தநிலையில் பூட்டைஉடைத்து வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் பணம் ரூ.50ஆயிரத்தை 4 பேரும் திருடிச்சென்றதாக சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சின்னமனூர்:

சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி தவமணி. இவர் அதேபகுதியை சேர்ந்த நாகம்மாள் என்பவருக்கு கிரைய விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்துள்ளார். இதில் பாதி பணம் கொடுத்துவிட்டு மீதி பணம் தராததால் உத்தமபாளையம் கோர்ட்டில் வழக்குதொடரப்பட்டது.

இந்த நிலையில் தவமணியை நாகம்மாள், அழகுபிரியா, அழகுராணி, ராஜாராம் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினர். மேலும் வீட்டிற்கு பூட்டுபோடப்பட்டது. இந்தநிலையில் பூட்டைஉடைத்து வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் பணம் ரூ.50ஆயிரத்தை 4 பேரும் திருடிச்சென்றதாக தவமணி சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com