search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி சீட்டு விற்றவர் கைது"

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காளைமாடு சிலை அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சூரம்பட்டி பாரதிபுரம் யுவராஜ் (வயது 37), என்பவரை போலீசார் கைது செய்தனர். மூலப்பாளையம் பழனி குமார் என்பவர் தலைமறைவாகி விட்டார்.

    மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கம்பம் வடக்கு போலீசார் சர்ச் தெரு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கம்பம்:

    கம்பம் வடக்குபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையிலான போலீசார் சர்ச் தெரு முன்பு ரோந்துபணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது 8-வது வார்டு தாத்தப்பன்கோவில் தெருவை சேர்ந்த அப்பாஸ்(62) என்பவர் தடைசெய்யப்பட்ட லாட்டரிசீட்டுகளை வைத்திருந்தார்.

    போலீசார் அவரை கைது செய்து லாட்டரிசீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40).
    • சரவணன் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சரவணன் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், சரவணனை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.3 ஆயிரத்து 360 பறிமுதல் செய்யப்பட்டது.

    ×