search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லவ்லினா"

    • சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிஸ்வஜித் வாசித்தார்.
    • நம் வாழ்நாளில் நாம் செய்ய முடியாத சாதனையை லவ்லினா செய்திருப்பதாக முதல்வர் பாராட்டினார்

    கவுகாத்தி:

    டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அசாம் மாநில வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார். 75 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின் பார்க்கரை 5-2 என லவ்லினா வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    இந்நிலையில், உலக சாம்பியன் பட்டம் வென்ற லவ்லினாவுக்கு அசாம் மாநில சட்டசபையில் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிஸ்வஜித் வாசித்தார்.

    பின்னர் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், 'மாநிலத்தின் விளையாட்டுக் கொள்கையின் அடிப்படையில், குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற லவ்னினாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்' என்று அறிவித்தார்.

    முதல்வர் மேலும் பேசுகையில், "நாம் புதிய லவ்லினா மற்றும் ஹிமா தாசை (தடகள வீராங்கனை) உருவாக்க வேண்டும். அவர்கள் ஏற்கனவே மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பதற்கான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். லவ்லினா பங்கேற்கும் அடுத்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? என்பதை இப்போது நாம் ஆராய வேண்டாம். நம் வாழ்நாளில் நாம் செய்ய முடியாத சாதனையை அவர் செய்திருக்கிறார்" என பாராட்டினார்.

    • குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டு இந்திய வீராங்கனைகளில் லவ்லினாவும் ஒருவர்.
    • தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததில் மகிழ்ச்சி அடைவதாக லவ்லினா தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார். 75 கிலோ எடைப்பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின் பார்க்கரை 5-2 என லவ்லினா வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

    இதற்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார் லவ்லினா. குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டு இந்திய வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.

    தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததில் மகிழ்ச்சி அடைவதாக லவ்லினா தெரிவித்தார். மேலும், உலக போட்டிகளில் இரண்டு வெண்கலமும், ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலமும் பெற்றிருந்த நிலையில், தங்கம் வெல்ல மிகவும் கடினமாக உழைத்ததாக தெரிவித்தார். 

    • லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் அருந்ததியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
    • 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தினார்.

    போபால்:

    6-வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. இதில் அசாமை சேர்ந்த லவ்லினா, 75 கிலோ இறுதிப்போட்டியில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரியை எதிர்த்துப் போட்டியிட்டார்.

    தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் அருந்ததியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

    அதேபோல, 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனாமிகாவை எதிர்கொண்டார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்த நிகாத், அனாமிகாவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.

    • ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் லவ்லினா, பர்வீன் ஹூடா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்,
    • இப்போட்டியில் இந்தியாவின் மீனாட்சி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    ஜோர்டான்:

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டிகள் இன்று தொடங்கியது.

    இந்த தொடரில் 75 கிலோ எடைப்பிரிவில் பெண்களுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அந்த வகையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) இன்று உஸ்பெகிஸ்தானின் ருஸ்மெடோவா சொகிபாவை எதிர்கொண்டார்.

    போட்டியின் ஆரம்பத்திலிருந்தே தனது புத்திசாலித்தனமான நுட்பங்களையும் உத்திகளையும் திறம்பட பயன்படுத்திய லவ்லினா இறுதியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

    இதேபோல், 63 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, ஜப்பான் வீரர் கிடோ மாயை எதிர்கொண்டார். இதில் 5-0 என்ற கணக்கில் பர்வீன் ஹூடா வென்று தங்கம் கைப்பற்றினார்.

    • இந்தியாவின் லவ்லினா, அல்பியா பதான் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • இந்த தொடரில் இந்தியாவுக்கு ஏற்கனவே 12 பதக்கங்கள் உறுதியாகி இருந்தன.

    ஜோர்டான்:

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் 12 இந்திய வீரர், வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஏற்கனவே 12 பதக்கங்கள் (குறைந்தது வெண்கலப் பதக்கம்) உறுதியாகி இருந்தன.

    இந்நிலையில், பெண்களுக்கான அரையிறுதி போட்டி நேற்று தொடங்கியது. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) கொரிய குடியரசின் சியோங் சுயோனை எதிர்கொண்டார்.

    தொடக்கம் முதலெ புத்திசாலித்தனமாக ஆடிய லவ்லினா இறுதியில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    அதேபோல், இந்தியாவின் அல்பியா பதான் 81+ கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் அங்குஷிதா போரோ (75 கிலோ) தோல்வி அடைந்து வெண்கலம் வென்றார்.

    ×