search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிலையன்ஸ் நிறுவனம்"

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே அனில் அம்பானி தெரிந்து வைத்திருந்தார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில், அதை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து உள்ளது. #RafaleDeal #Reliance #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே அனில் அம்பானி தெரிந்து வைத்திருந்தார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில், அதை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து உள்ளது.

    இதுபற்றி அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியால் குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல், ஏர்பஸ் மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனங்கள் இடையேயானது. இது மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தின் கீழான சிவில் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் திட்டங்கள் தொடர்பானது.

    உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய விவாதம், ஏர்பஸ் ஹெலிகாப்டர், ரிலையன்ஸ் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பானது ஆகும். பிரான்ஸ் அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயான 36 ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும், இதற்கும் தொடர்பு இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #RafaleDeal #Reliance #RahulGandhi

    பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் - டசால்ட் நிறுவனம் செய்துகொண்ட ஏற்பாடுகளுக்கும் இந்திய அரசுக்கும் எந்த தொடர்பு இல்லை என ராணுவ அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. #Hollande #RafaleDeal #DefenceMinistry
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.

    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து கடந்த 2015-ம் ஆண்டில் பாரதிய ஜனதா ஆட்சியில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசுக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல் விமானத்துறையில் முன் அனுபவம் இல்லாத அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும், அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

    இதற்கிடையே, ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்தத்தால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே நேற்று குறிப்பிட்டிருந்தார்.



    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராணுவ அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

    அதில், ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் டசால்ட் விமான தயாரிப்பு நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் முற்றிலுமாக அவ்விறு நிறுவனங்களுக்கும் இடையிலான விவகாரம் என்றும், இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை எந்த வகையிலும் இந்திய அரசு தேர்ந்தெடுத்து டசால்ட் நிறுவனத்திடம் முன்மொழியவில்லை, இதில் அரசுக்கு எந்த பங்களிப்பும் கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், பிரான்ஸ் முன்னாள் அதிபரின் பத்திரிகை பேட்டியை வைத்து தேவையில்லாத சர்ச்சைகள் எழுப்பப்படுவதாகவும் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Hollande #RafaleDeal #DefenceMinistry
    ×