search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெசன்ஜர்"

    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் போன்ற பேஸ்புக் நிறுவன செயலிகளில் மெட்டா பிராண்டிங் அமலுக்கு வந்தது.


    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் மற்றும் இதர பேஸ்புக் குழும செயலிகளில் மெட்டா பிராண்டிங் காண்பிக்கிறது. அனைத்து செயலிகளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் மெட்டா பிராண்டிங் தோன்றுகிறது. முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என மாற்றுவதாக அறிவித்தது.

    அந்த வரிசையில், தற்போது செயலிகளில் பேஸ்புக்கிற்கு மாற்றாக மெட்டா எனும் பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது. முன்பை போன்று வழக்கமான சமூக வலைதளமாக நிறுவனமாக மட்டும் செயல்படுவதை தவிர்த்து, மெட்டாவெர்ஸ் எனும் புதிய மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.

     கோப்புப்படம்

    பேஸ்புக் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் பல்வேறு இதர தொழில்நுட்ப நிறுவனங்களும் மெட்டாவெர்ஸ் போன்ற சேவைகளை உருவாக்கும் முயற்சியை துவங்கி உள்ளன.
    ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் அன்சென்ட் அம்சம் வழங்குவதை உறுதி செய்திருந்த நிலையில், பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படுகிறது. #messengerupdate



    ஃபேஸ்புக் தளத்தில் அன்சென்ட் அம்சம் வழங்குவதை ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், இதற்கான அப்டேட் வழங்கப்படுவதாக தெரிகிறது. அதன்படி ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய மெசேஜ்களை திரும்பப் பெறும் வசதி வழங்கப்படுகிறது.

    மெசன்ஜரில் அனுப்பிய குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட முதல் பத்து நிமிடங்களுக்குள் அவற்றை திரும்பப்பெற முடியும். இதன் மூலம் தவறாக அனுப்பிய குறுந்தகவல்களை திருத்தவோ அல்லது நிரந்தரமாக அழிக்கவோ முடியும். இந்த ஆப்ஷன் பயன்படுத்தும் போது குறுந்தகவல் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் தகவல் திரையில் தோன்றுகிறது. 

    ஃபேஸ்புக்கில் அன்சென்ட் செய்யப்பட்ட மெசேஜ்கள் சிறிது நேரத்திற்கு அப்படியே இருக்கும், இதனால் மெசேஜ்கள் ரிப்போர்ட் செய்யப்பட்டால் அவை மறுபரிசீலனை செய்யப்பட்டும். அனுப்பிய மெசேஜ்களை திரும்பப்பெறும் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது.



    முதற்கட்டமாக இந்த வசதி போலாந்து, பொலிவியா, கொலம்பியா மற்றும் லித்துவேனியா உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்படுகிறது. எனினும், மற்ற நாடுகளில் விரைவில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய எழுத்துக்கள், க்ரூப் சாட்கள், புகைப்படம், வீடியோக்கள், லின்க் உள்ளிட்டவற்றை அனுப்பிய பத்து நிமிடங்களுக்குள் அழிக்க முடியும்.

    மெசஞ்சர் உரையாடலில் அனுப்பப்படும் அனைத்தும் தகவல்களை அழிக்க முடியும், எனினும் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை மட்டுமே உங்களால் அழிக்க முடியும். மற்றவர்கள் உங்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்களை உங்களால் அழிக்க முடியாது. 

    மெசஞ்சரில் அன்சென்ட் அம்சத்தை பயன்படுத்த, மெசேஜை அழுத்திப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது மெசேஜை திரும்பப் பெறச் செய்யும் ஆப்ஷன் திரையில் தெரியும். அதில் அனைவருக்கும் அழிக்கக் கோரும் ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும். 

    இவ்வாறு செய்யும் போது “மெசேஜ் நிரந்தரமாக அழிக்கப்படும், நீங்கள் மெசேஜை அழித்த விவரம் அனைவருக்கும் தெரியவரும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்” என்ற எச்சரிக்கை தகவல் திரையில் தோன்றும். மேலும் பல்வேறு புதிய அன்சென்ட் வசதிகளை வழங்க ஃபேஸ்புக் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
    ஃபேஸ்புக் மெசன்ஜரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் மூலம் வீடியோ சாட்டில் இருந்த படி ஏ.ஆர். கேம்களை விளையாட முடியும். #AugmentedReality


    ஃபேஸ்புக் மெசன்ஜரில் புதிய கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மல்டி-பிளேயர் வீடியோ சாட் ஏ.ஆர். கேம்ஸ் என அழைக்கப்படும் புதிய வசதி மெசன்ஜரில் வீடியோ காலிங் அனுபவத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

    அதிகபட்சம் ஆறு பேருடன் வீடியோ கால் மேற்கொண்டு கேமிங் அனுபவத்தை அதிக உரையாடல்களுடன், நிஜமானதாக உணர முடியும். மெசன்ஜரில் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு சவால் விடுத்து, அவர்கள் எத்தனை நேரம் சிரிக்கமால் உள்ளனர் என்பதை பார்க்கவோ அல்லது விண்வெளியில் அதிரடி போர் விளையாட்டு போன்றவற்றை அனுபவிக்க முடியும்.

    இதுவெறும் துவக்கம் தான் என்றும் விரைவில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த புதிய கேம்கள் அடுத்தடுத்து சேர்க்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பந்தை பின்புறம் பாஸ் செய்யும் விளையாட்டு “பீச் பம்ப்”  (Beach Bump) என்ற பெயரிலும் மேட்ச் செய்யும் பூனை விளையாட்டு “கிட்டன் கிரேஸ்” (Kitten Kraze) என்ற பெயரில் வழங்கப்பட இருக்கிறது. 

    புதிய கேமிங் அனுபவத்தில் திளைக்க அப்டேட் செய்யப்பட்ட மெசன்ஜர் செயலியை பயன்படுத்த வேண்டும். அப்டேட் செய்தவர்கள் சாட் விண்டோவில் விளையாட விரும்புபவரை தேர்வு செய்து, மேலே காணப்படும் வீடியோ ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஐகான் திரையின் மேல் வலது புறமாக காணப்படும்.

    பின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து மெசன்ஜரில் காணப்படும் ஏ.ஆர். கேம்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இனி நீங்கள் தேர்வு செய்த நபருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். புதிய அனுபவங்கள் ஏ.ஆர். ஸ்டூடியோ மேலும் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவை உங்களுக்கு அதிகம் அறிமுகமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க ஏதுவாக இருக்கும். #Facebook #AugmentedReality
    ×