search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெகபூபா"

    மெகபூபா போட்டியிடும் அனந்தநாக் தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து 11 மணி வரை ஒரு வாக்காளர் கூட வாக்களிக்கவில்லை. #LokSabhaElections2019

    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் பாராளுமன்ற தொகுதி நாடு முழுவதும் மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா போட்டியிடுகிறார். கடந்த 2014-ம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்ற அவர் மீண்டும் களம் இறங்கி உள்ளார்.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் குலாம் அகமது போட்டியிடுகிறார். தேசிய மாநாடு கட்சி சார்பில் மசூதி போட்டியிடுகிறார். இவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் யூசுப் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் இந்த தொகுதியில் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்த தொகுதி அனந்த நாக், புல்வாமா, சோபியான், குல்கம் ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.

    இதன் காரணமாக அனந்தநாக் பாராளுமன்ற தொகுதி தேர்தலை 3 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி ஏப்ரல் 23-ந்தேதி அனந்தநாக் மாவட்டத்திலும், ஏப்ரல் 29-ந்தேதி குல்கம் மாவட்டத்திலும், மே 6-ந்தேதி புல்வாமா, சோபியான் மாவட்டங்களிலும் ஓட்டுப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தியாவில் ஒரு பாராளு மன்ற தொகுதிக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். 13 லட்சத்து 95 ஆயிரத்து 272 வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடை பெற்றது.

    இன்று அனந்தநாக் மாவட் டத்தில் மட்டும் நடைபெறும் ஓட்டுப்பதிவுக்கு ஆயிரத்து 842 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

    இவர்களை எதிர்நோக்கி நேற்று இரவு முதலே தேர்தல் பணியாளர்கள் தயாராக இருந்தனர். ஆனால் இன்று காலை ஒருவர்கூட வாக்களிக்க வரவில்லை.

    7 மணிக்கு தொடங்கி 4 மணி நேரம் கடந்த பிறகும் அதாவது பகல் 11 மணி வரை 1,842 வாக்குச்சாவடிகளிலும் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

    வாக்காளர்கள் வருகைக்காக அதிகாரிகள் அதுவரை சும்மா காத்திருந்தனர். சில பகுதிகளில் வாக்களிக்க வருமாறு பொதுமக்களை அதிகாரிகள் அழைத்தனர். ஆனால் அவர்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்து விட்டனர்.

    அனந்தநாக் தொகுதியில் பொதுமக்கள் யாரும் வாக்களிக்க வரக்கூடாது என்று கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்தப்படி இருந்தனர். இதன் காரணமாக அங்கு ஓட்டுப்பதிவில் மந்தநிலை காணப்படுகிறது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக பிற்பகல் 4 மணி வரைதான் ஓட்டுப்பதிவை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்குள் கணிசமானவர்களை அழைத்து வந்து வாக்குப் பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    என்றாலும் அனந்தநாக் தொகுதியின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரலாறு காணாத வகையில் மிக மிக குறைவாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் ஆளுநர் இன்று ஆலோசனை நடத்தினார். #JammuKashmir #Vohra #JKAllPartyMeet
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், பி.டி.பி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக சமீபத்தில் விலக்கிக் கொண்டது. இதனால், பி.டி.பி. கட்சி தலைவர் மெகபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாநில ஆளுநர் வோரா அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. ஆளுநரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மெகபூபா முப்தி பங்கேற்றார். இதேபோல் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ.மிர்,  பா.ஜ.க. தலைவர் சாத் சர்மா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில், காஷ்மீரில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாநிலத்தில் அமைதி நிலவுவதற்கு என்ன செய்யலாம்? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற முடியாத வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் மெகபூபா வலியுறுத்தினார். 

    ஆளுநர் என்.என்.வோராவின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் மறு உத்தரவு வரும் வரையில் அவர் பதவியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. #JammuKashmir #Vohra #JKAllPartyMeet
    ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #modiwishes #MehboobaMufti
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.



    இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஜம்மு காஷ்மீரின் முதல்வர் மெகபூபா முப்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவர் உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் வாழ நான் இறைவனை வேண்டுகிறேன்’ என மோடி பதிவிட்டுள்ளார். #modiwishes #MehboobaMufti
    ×