search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினி லாரி விபத்து"

    • பழுதாகி நின்ற லாரி மீது மோதியது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு ஊராட்சி, பச்சக்குப்பம் ெரயில்வே மேம்பாலத்தில், இன்று அதிகாலை மினி லாரி ஒன்று பழுதாகி நின்றது. அப்போது பின்புறமாக வந்த மற்றொரு மினி லாரி, பழுதாகி நின்ற மினிலாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் வேலூர் சார்பனாமேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் தமீம் (வயது 50) படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரியின் கூண்டு பகுதியின் மேற்பகுதி சாலையின் குறுக்கே நின்ற மரக்கிளையின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது.
    • மினி லாரி அந்தரத்தில் தொங்கிய வீடியோ தென்காசி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் இந்திரா நகர் பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே மரம் வளர்ந்துள்ளது.

    அவ்வழியே செல்லும் அரசு பஸ்கள், கனரக லாரிகள் உள்ளிட்டவை செல்லும் பொழுது மரக்கிளையில் உரசுவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறி சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை கூறியும் மரத்தை அகற்றாமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாவூர்சத்திரம் மாடக்கண்ணு பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தனது கூண்டு கட்டிய மினி லாரியில் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் கேன் போட்டு விட்டு மீண்டும் மாடக் கண்ணுபட்டி நோக்கி வந்த போது மினி லாரியின் கூண்டு பகுதியின் மேற்பகுதி சாலையின் குறுக்கே நின்ற மரக்கிளையின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது.

    இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து அந்தரத்தில் தொங்கிய மினி லாரிக்குள் இருந்த சுப்பிரமணியனை பத்திரமாக மீட்டு லாரியையும் மரக்கிளையில் இருந்து லாவகமாக இறக்கினர்.

    லாரி மரக்கிளையில் சிக்கியதை வீடியோவாக எடுத்து ஆவுடையானூர் பகுதியை சேர்ந்த தமிழன் மக்கள் நலச்சங்கம் என்ற சமூக ஆர்வலர் அமைப்பை சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலை துறையினரின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    தற்போது மினி லாரி அந்தரத்தில் தொங்கிய வீடியோ தென்காசி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த குன்னத்தூர் பகு தியை சேர்ந்தவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஆடி. கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருந்து நேற்று ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு மினி லாரியில் சென்றனர்.

    குன்னத்தூரை சேர்ந்த சின்னராஜ் (வயது 55) மினி லாரியை ஓட்டிச் சென் றார்.

    ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து, வேண்டுதலை நிறை வேற்றிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். ஏலகிரி மலை 3-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது மினி லாரி நிலைதடு மாறி சாலையில் கவிழ்ந்தது.

    இதில் மினி லாரியில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன் சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 3 ஆம்புலன்ஸ் கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக் காக திருப்பத்தூர் அரசு மருத் துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வை யிட்டு விசாரணை மேற் கொண்டனர்.

    மினி லாரியை ஓட்டி சென்ற டிரைவரும், உரிமையாளருமான சின்னராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    இந்த நிலையில் தலைமறைவான டிரைவர் சின்னராஜை இன்று காலை ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×