search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில கபடி போட்டி"

    • மாநில கபடி போட்டிக்கு புனித ஜான்ஸ் பள்ளி தகுதி பெற்றது.
    • அரசு உதவி பெறும் 24 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பசும்பொன்

    கமுதி அருகே உள்ள கே.எம்.கோட்டை புனித ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மேலும் 19-ம் வயதிற்குட்பட்ட இப்பள்ளி மாணவர்கள் 2-ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பயிற்சி அளித்த ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

    மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் சிக்கல், உப்பூர்,சாயல்குடி, பரமக்குடி, ராமேசுவரம், மண்டபம், உச்சிப்புளி உட்பட ஏராளமான பகுதியில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 24 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளி, கல்லூரி மற்றும் மாவட்ட கபடிக்கழகத்தில் பதிவு பெற்ற அணியின் வீரர்கள் கலந்து கொள்ளலாம்.
    • இளையோர் பொறுக்குத்தேர்வு (செலக்ஷன் டிரையல்ஸ்) காலை 9 மணிக்கு நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா ஏ.சண்முகம் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்ட கபடி கழகத்தின் சார்பில் இளையோர் பொறுக்குத்தேர்வு (செலக்ஷன் டிரையல்ஸ்) வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு திருப்பூர் மாவட்ட கபடிக்கழக அலுவலக மைதானத்தில் நடக்கிறது.

    இதில் பள்ளி, கல்லூரி மற்றும் மாவட்ட கபடிக்கழகத்தில் பதிவு பெற்ற அணியின் வீரர்கள் கலந்து கொள்ளலாம். மாவட்ட ஜூனியர் அணிக்கு தே்ாவுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பயிற்சி முகாம்நடத்தி வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் மயிலாடுதுறையில் நடைபெறும் மாநில இளையோர் 'சாம்பியன்ஷிப்' போட்டிக்கு மாவட்ட கபடிக்கழகத்தின் சார்பில் அழைத்துச்செல்லப்படுவார்கள். இதில் தேர்வாக வயது வரம்பு சிறுவர் 20.11.2002 அன்றோ அல்லது அதற்கு பின்போ பிறந்திருக்க வேண்டும். 70 கிலோ எடை இருக்க வேண்டும். வயது சான்றிதழாக ஆதார் அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ், பாஸ்போர்ட், இதில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக (அசல்) கொண்டு வரவேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் குடியிருக்கும் சிறுவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். பங்கேற்கும் தகுதியுடைய சிறுவர்களுக்கு ஆறுதல் பரிசு ரூ.200 வழங்கப்படும். மதியம் உணவும் வழங்கப்படும்.

    தே்ாவுப்போட்டி 6-ந்தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலையில் முடிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சேலத்தில் நடைபெறும் மாநில மிக இளையோருக்கான கபடி போட்டிக்கு வீரர்&-வீராங்கனைகள் தேர்வு திருப்பூரில் நடைபெற்றது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெறும் மாநில மிக இளையோருக்கான கபடி போட்டிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு திருப்பூர் மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் தலைமை தாங்கினார். பொருளாளர் ஆறுச்சாமி ,தேர்வு கமிட்டி தலைவர் ருத்ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 14 வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் காவியஸ்ரீ, ஸ்ரீபிரியா, திவ்யலட் சுமி, சுடியக்கா, மைதிலி, ஜோதிலட்சுமி, மேகலா ஆகிய 7 வீராங்கனைகளும், குருபிரசாத், நிஷாந்த், சாந்தப்பிரியன், அங்கித்து, மதன்குமர், இனியன், கார்வேந்தன் ஆகிய 7 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இணைசெயலாளர்கள் வாலிசன், சின்னு, செல்வராஜ், பயிற்சி யாளர்கள் வெங்கடேஷ், நாகராஜ், நடுவர் முத்துசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×