என் மலர்
நீங்கள் தேடியது "இளம் வீரர்கள் தேர்வு"
- பள்ளி, கல்லூரி மற்றும் மாவட்ட கபடிக்கழகத்தில் பதிவு பெற்ற அணியின் வீரர்கள் கலந்து கொள்ளலாம்.
- இளையோர் பொறுக்குத்தேர்வு (செலக்ஷன் டிரையல்ஸ்) காலை 9 மணிக்கு நடக்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா ஏ.சண்முகம் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்ட கபடி கழகத்தின் சார்பில் இளையோர் பொறுக்குத்தேர்வு (செலக்ஷன் டிரையல்ஸ்) வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு திருப்பூர் மாவட்ட கபடிக்கழக அலுவலக மைதானத்தில் நடக்கிறது.
இதில் பள்ளி, கல்லூரி மற்றும் மாவட்ட கபடிக்கழகத்தில் பதிவு பெற்ற அணியின் வீரர்கள் கலந்து கொள்ளலாம். மாவட்ட ஜூனியர் அணிக்கு தே்ாவுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பயிற்சி முகாம்நடத்தி வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் மயிலாடுதுறையில் நடைபெறும் மாநில இளையோர் 'சாம்பியன்ஷிப்' போட்டிக்கு மாவட்ட கபடிக்கழகத்தின் சார்பில் அழைத்துச்செல்லப்படுவார்கள். இதில் தேர்வாக வயது வரம்பு சிறுவர் 20.11.2002 அன்றோ அல்லது அதற்கு பின்போ பிறந்திருக்க வேண்டும். 70 கிலோ எடை இருக்க வேண்டும். வயது சான்றிதழாக ஆதார் அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ், பாஸ்போர்ட், இதில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக (அசல்) கொண்டு வரவேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் குடியிருக்கும் சிறுவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். பங்கேற்கும் தகுதியுடைய சிறுவர்களுக்கு ஆறுதல் பரிசு ரூ.200 வழங்கப்படும். மதியம் உணவும் வழங்கப்படும்.
தே்ாவுப்போட்டி 6-ந்தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலையில் முடிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






