search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை முன்னெச்சரிக்கை"

    பேரிடர் காலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட கூடிய பகுதிகள் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள துணை கலெக்டர்நிலையில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து அனைத்துறைகளும் இணைந்து பருவமழை தொடர்பாக பணியாற்றி வருகிறார்கள்.

     கடலூர்:

    வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் புயல் உருவானதால் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி, சிதம்பரம் நகராட்சி, மற்றும் பெருமாள் ஏரி, வீராணம் ஏரி ஆகிய பகுதிகளில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது கடலூர் கார்த்திகேயன் நகர் மற்றும் முதுநகர் நாராயணசாமி நகர் ஆகிய பகுதிகளில் மோட்டார் பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதையும், ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் உள்ள அங்கன் வாடி மையத்தில் பருவ மழையையொட்டி முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமினையும், குடிகாடு ஊராட்சியில் மழைநீர் வடிய ஏதுவாக புலிக்குத்தி கிளை வாய்க்கா ல் தூர்வாரும் பணிகள், பெருமாள் ஏரியை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது ஏரிக்கு நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றுதல் குறித்து ஆய்வு செய்ததோடு, ஏரியை தொடர்ந்து கண்கா ணிக்க நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு, உழவர் சந்தை எதிரே உள்ள வடிகால் தூர்வாரும் பணிகளையும் மற்றும் பஸ் நிலையம், மணிக்கூண்டு அருகே உள்ள வடிகால் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்பட்ட வீராணம் ஏரியை பார்வை யிட்டு, ஏரியின் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றுதல் குறித்து தொடர்ந்து கண்கா ணிக்க நீர்வளத்துறை அலுவலர்க ளுக்கு உத்தரவி ட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-மேலும் பேரிடர் காலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட கூடிய பகுதிகள் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள துணை கலெக்டர்நிலையில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து அனைத்துறைகளும் இணைந்து பருவமழை தொடர்பாக பணியாற்றி வருகிறார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தற்போது 255 ஹெக்டர் விலை நிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடிவதற்கேற்ப போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஷ்ரா, கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகர மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர்ராஜசேகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கூடுதல் நகராட்சி நிர்வாக இயக்குநர் விஜயகுமார் , கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரண்யா, சப்-கலெக்டர் சுவேத்தா சுமன் , வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, நீர்வளத்துறை செயற் பொறியாளர் காந்த ருபன் , மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் , சிதம்பரம் நகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன், மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் விஜய சுந்தரம், தனஞ்செயன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக் , கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், ஆராமுது, பாலசுந்தர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மரக்கிளைகளை வெட்டி சீரமைக்கலாம்.
    • மாணவ, மாணவிகள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.

    திருப்பூர்:

    தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மழைக்காலம் என்பதால், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், கலெக்டர் வினீத், பள்ளி வளாக பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசியதாவது:-

    பள்ளி வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளை சரிபார்த்து, முறைப்படுத்திக் கொள்வதுடன் வளாகத்தில் உள்ள மரக்கிளைகளை வெட்டி சீரமைக்கலாம். கட்டடத்தின் மேற்கூரையை சுத்தம் செய்து, மழைநீர் உடனுக்குடன் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.மாடிப்படிகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்து, மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் மழைநீர் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும்.

    வளாகத்தில் உள்ள பழுதான மற்றும் ஆபத்தான கட்டடங்களை இடிக்க ஆவண செய்ய வேண்டும். மழைக் காலங்களில் ஆபத்தான கட்டடங்கள் அருகே மாணவர்கள் செல்வதை தடுக்க வேண்டும்.பள்ளி மைதானம், வளாகத்திலுள்ள குழிகள், முட்புதர்களை சீரமைக்க வேண்டும். கிணறுகள் இருந்தால், கம்பிவலை அமைத்து பாதுகாப்பை உருவாக்க வேண்டும்.

    நீர்நிலைகளுக்கு அருகே மாணவ, மாணவிகள் செல்வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி நேரத்தில், மழை பெய்தால், வகுப்பறைகளில் இருந்து மாணவ, மாணவிகள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    ×