search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு
    X

    கோப்புபடம். 

    மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு

    • மரக்கிளைகளை வெட்டி சீரமைக்கலாம்.
    • மாணவ, மாணவிகள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.

    திருப்பூர்:

    தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மழைக்காலம் என்பதால், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், கலெக்டர் வினீத், பள்ளி வளாக பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசியதாவது:-

    பள்ளி வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளை சரிபார்த்து, முறைப்படுத்திக் கொள்வதுடன் வளாகத்தில் உள்ள மரக்கிளைகளை வெட்டி சீரமைக்கலாம். கட்டடத்தின் மேற்கூரையை சுத்தம் செய்து, மழைநீர் உடனுக்குடன் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.மாடிப்படிகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்து, மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் மழைநீர் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும்.

    வளாகத்தில் உள்ள பழுதான மற்றும் ஆபத்தான கட்டடங்களை இடிக்க ஆவண செய்ய வேண்டும். மழைக் காலங்களில் ஆபத்தான கட்டடங்கள் அருகே மாணவர்கள் செல்வதை தடுக்க வேண்டும்.பள்ளி மைதானம், வளாகத்திலுள்ள குழிகள், முட்புதர்களை சீரமைக்க வேண்டும். கிணறுகள் இருந்தால், கம்பிவலை அமைத்து பாதுகாப்பை உருவாக்க வேண்டும்.

    நீர்நிலைகளுக்கு அருகே மாணவ, மாணவிகள் செல்வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி நேரத்தில், மழை பெய்தால், வகுப்பறைகளில் இருந்து மாணவ, மாணவிகள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    Next Story
    ×