search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலேசிய பிரதமர்"

    • ஹமாஸ் அமைப்பை ஆதரிப்பவர்களுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் இயற்றியது
    • ஐ.நா. சபை எடுக்கும் முடிவுகளைத்தான் மலேசியா ஆதரிக்கும்

    தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சிறிய நாடு, மலேசியா. இதன் தலைநகரம் கோலாலம்பூர்.

    இந்தியாவை விட 10 மடங்கு பரப்பளவில் குறைந்த நாடான மலேசியாவில் இஸ்லாமிய சன்னி பிரிவினர் பெருமளவு (63 சதவீதம்) வாழ்கின்றனர். இந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim).

    இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன; பெரும்பாலான அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கும் வெளிநாட்டு அமைப்புகளுக்கும், அரசாங்கங்களுக்கும் எதிராக அமெரிக்க பாராளுமன்றம் கடந்த வாரம் தீர்மானம் இயற்றியது.

    இந்நிலையில், இது குறித்து மலேசிய பாராளுமன்றத்தில் அன்வர் இப்ராஹிம் பேசினார்.

    அப்போது அன்வர், "மலேசிய மக்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும். ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை ஏற்று கொள்ள போவதில்லை. இனவெறியை எதிர்த்து ஆப்பிரிக்க மக்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலாவை போல் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் மக்களுக்காக போராடி வருகின்றனர். அமெரிக்கா எனும் தனிநாடு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கோ, அச்சுறுத்தலுக்கோ நான் அஞ்ச போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் முடிவுகளைத்தான் நாங்கள் அங்கீகரிப்போம்" என திட்டவட்டமாக அறிவித்தார்.

    காசாவின் மீதான் இஸ்ரேல் தாக்குதலை "காட்டுமிராண்டித்தனம்" என அன்வர் சில தினங்களுக்கு முன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மலேசியாவின் பத்தாவது பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ செரி அன்வர் இப்ராகிமுக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • வருங்காலத்தில் பண்பாடு, வணிகம், முதலீடு ஆகியவற்றில் நமது கூட்டுறவை மேம்படுத்த ஆவலாக இருக்கிறேன்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    மலேசியாவின் பத்தாவது பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ செரி அன்வர் இப்ராகிமுக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் பண்பாடு, வணிகம், முதலீடு ஆகியவற்றில் நமது கூட்டுறவை மேம்படுத்த ஆவலாக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • அன்வார் இப்ராகிம் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களுக்குக்கு குறைவாக 82 இடங்களைப் பெற்றது.
    • முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 73 இடங்களை வென்றது.

    மலேசியாவில் ஐக்கிய மலாய் தேசிய கட்சி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதலில் பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றார்.

    ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து மொகிதீன் யாசினி பிரதமராக பதவி ஏற்றார்.

    அவர் மீது ஊழல் புகார் எழுந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி விலகினார். அதன்பிறகு புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாசோப் பதவி ஏற்றார். இதற்கிடையே ஆளும் கூட்டணியின் பெரிய கட்சியான அம்னோ கட்சி அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

    இதையடுத்து பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் உத்தரவிட்டார். இதற்கு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா ஒப்புதல் அளித்தார். அடுத்த 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, கடந்த சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியான நிலையில்,  அன்வர் இப்ராஹீம் கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களுக்குக்கு குறைவாக 82 இடங்களைப் பெற்றது.

    முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 73 இடங்களை வென்றது, அதன் கூட்டணிக் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களைப் பெற்று மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

    ஆனால், மற்ற சிறிய கட்சிகள் ஐக்கிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டதை அடுத்து நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்தது. மலேசிய எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமராக நியமிக்கப்படுகிறார். இது தொடர்பான அறிவிப்பை மன்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

    உள்ளூர் நேரப்படி இன்றுமாலை 5 மணிக்கு அவர் பிரதமராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார்.

    ×