search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருள் ஒழிப்பு"

    • அரசு கலைக்கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழிப்புணர்வு நாடகம், பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 32 இடங்களில் நடைபெற்றது.

    உடுமலை

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் கல்யாணி முன்னிலை வகித்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன்(தளி) ,போதை ஒழிப்பு விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்.

    அதைத் தொடர்ந்து காணொளி வாயிலாக சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.பின்னர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் என்.சி.சி, கல்லூரி மாணவர்கள், போலீசார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு சென்றனர். பேரணி கல்லூரியில் இருந்து உடுமலை திருமூர்த்திமலை சாலையை சென்றடைந்து மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது.அப்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ்(சட்டம்ஒழுங்கு), சந்திரமௌலி(மதுவிலக்கு)உள்ளிட்ட போலீசார், மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ப.விஜயா தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் ராசேந்திரன்,கார்த்திகா உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போன்று உடுமலை உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், கொமரலிங்கம், தளி, அமராவதிநகர், கணியூர் உள்ளிட்ட காவல் சரக பகுதியில் 20 இடங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சம்பந்தமான ஒளிபரப்பு நிகழ்ச்சி, விழிப்புணர்வு நாடகம், பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 32 இடங்களில் நடைபெற்றது. இந்தப் பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் போலீசார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருட்கள் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துக் கூறியதுடன் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்கள்.

    அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    • காரைக்கால் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் வரும் 26ந் தேதி நடைபெறும், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வுள்ளது. என, மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் அறிவித்துள்ளார். காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை சார்பில், வரு கின்ற 26-ந் தேதி, காரைக் காலில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, காரைக்கால் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    வருகிற 26-ந் தேதி, காரைக்காலில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படு கிறது. காரைக்கால் மாவட்டத்தில், போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பது நமது கடமை. அன்றையதினம் பொது மக்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்து இயக்கம், பேரணி உள்ளிட்ட வைகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் போதைப் பொருள் ஒழிப்பது சம்பந்தமாக விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டும். இது குறித்து, பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி களும் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கு, அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம் என்றார்.

    கூட்டத்தில் பயிற்சி கலெக்டர், துணை கலெக்டர் பாஸ்கரன், போலீஸ் சூப்பி ரண்டுகள் சுப்பிரமணியன், நிதின் கவ்ஹால் ரமேஷ் மற்றும் நலவழித்துறை, சுகாதா ரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, காரைக் கால் நகராட்சி ஆணையர் மற்றும் கொம்யூன பஞ்சாயத்து ஆணையர்கள் கலந்து கொண்டார்கள்.

    • வாடிப்பட்டியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
    • பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    போதை ஒழிப்பு தினத்தையொட்டி வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சரவண முருகன் தலைமை தாங்கினார்.

    இதில் போதை ஒழிப்பு சட்டங்கள் பற்றி போலீஸ்இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, போதை பழக்கத்தால் ஏற்படும் நோய்கள், விளைவுகள் பற்றி டாக்டர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், பொன்.முத்துக்குமார், ராஜேஷ் ஆகியோர் பேசினார். பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

    ×