என் மலர்
நீங்கள் தேடியது "போடி பஸ் நிலையம்"
மேலசொக்கநாதபுரம்:
போடி நகராட்சி பஸ் நிலையத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இங்கு நிரந்தரமாக 15 மனநோயாளிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் தங்கி உள்ளனர். பயணிகள் நிற்கும், இளைப்பாறும் இடத்தில் அவர்கள் படுத்துக்கொண்டும், அதே இடத்தில் இயற்கை உபாதைகளை கழித்தும் வருகின்றனர்.
இதனால் பயணிகள் நிற்கும் இடத்தில் துர்நாற்றம் வீசி மழைக்கு கூட ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மனநோயாளிகள் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளை கம்பால் துரத்தி தாக்கி வருகிறார்கள். இதனால் பஸ் நிலையத்துக்குள் வருவதற்கே பயணிகள் அச்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் மது அருந்தி அதே இடத்தில் வாந்தி எடுத்து அசுத்தம் செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுக்கு முன்பு பஸ் நிலையத்தில் மனநோயாளிகளாக சுற்றி திரிந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு அவர்கள் கர்ப்பம் அடைந்து உயிரிழந்தனர். மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கவும், மனநோயாளிகள் மற்றும் பிச்சைக்காரர்களை கோடாங்கிபட்டியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
போடி சிலமலை அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் செல்லையா. கூலி தொழிலாளி. இவர் போடியில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கான பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் செல்லையாவிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொடுக்குமாறு கூறினார்.
ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த அந்த நபர் செல்லையாவை கத்தியால் கையில் குத்தினார். இதில் வேதனையால் செல்லையா கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
உடனே அந்த நபர் தப்பி ஓட முயன்றார். உஷரான பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் வடிவேல் என்கிற தீக்கொளுத்தி (வயது29), பிரபல ரவுடி என தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews






