search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து காவல் துறை"

    • பெண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரல் ஆனது.
    • ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்ற போலீசாருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற செய்யும் காவல் துறையினரே, அவற்றை மீறலாமா? சிசிடிவி கேமரா மற்றும் ஆன்லைன் சல்லான் முறை போன்ற வசதிகளால், விதிமீறல் சம்பவங்கள் எளிதில் வெளிச்சத்திற்கு வந்துவிடுகின்றன. பல சம்பவங்களில் போலீசார் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை ஆதாரமாக கொண்டு விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

    இது போன்ற சம்பவங்களில் பொது மக்கள் மட்டுமின்றி போலீசாரும் சமயங்களில் சிக்கி இருக்கின்றனர். அந்த வரிசையில், ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்ற போலீசாருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் அரங்கேறி இருக்கிறது.

     

    சம்பவம் பற்றிய வீடியோ டுவிட்டர் தளத்தில் மஞ்சுள் என்பவர் பதிவிட்டுள்ளார். வீடியோவில், டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் பைக்கில் இரண்டு போலீசார் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் போலீசார் ஹெல்மட் அணியாமல் செல்கின்றனர். காவல் துறை சீருடையில் பயணம் செய்வதோடு, விதிமீறலில் ஈடுபட்ட போலீசாரிடம், மற்றொரு வாகனத்தில் வந்த பெண் ஒருவர் சட்டம் உங்களுக்கு பொருந்தாதா என்று கேள்வி எழுப்புகிறார்.

    இதனை பெண் ஓட்டும் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் வீடியோ எடுத்திருக்கிறார். இதனை பார்த்த போலீசார், வீடியோ பதிவாவதை தெரிந்து கொண்டு பெண்ணிடம் எதுவும் பேசாமல், வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றனர். போலீசாரை துரத்தி சென்ற பெண் அவர்களை சிக்னல் ஒன்றில் வைத்து பிடித்தார். எனினும், போலீசார் அந்த பெண்ணிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    பெண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரல் ஆனது. இதனை பார்த்த காவல் துறை உயர் அதிகாரிகள் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய போலீசாருக்கு ரூ. 1000 அபராதம் விதித்தனர். போலீசார் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே பலமுறை எடுக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைகவசம் அணிவது கட்டாயம் ஆகும். தலைகவம் அணிவதால் விபத்தின் போது வாகனம் ஒட்டுவோரின் உயிரை காக்கும்.

    • டெல்லியில் மது போதையில் போக்குவரத்து போலீஸ் மீது கார் ஏற்றிய நபர் கைது.
    • விபத்தில் சிக்கிய போலீசாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த இரண்டு போக்குவரத்து போலீசார் மீது மது போதையில் வந்த நபர் காரை ஏற்றியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார். மது போதையில் போலீசார் மீது காரை ஏற்றிய நபர் தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்யப்பட்டார்.

    போக்குவரத்து போலீசாரிடம் அபராதம் செலுத்தாமல் தப்பிக்க நினைத்து, மது போதையில் வந்த ஆசாமி காரை கொண்டு மோதியிருக்கிறார். விபத்தில் சிக்கிய தலைமை கான்ஸ்டபில் விகாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் விபத்தில் சிக்கிய மற்றொரு போலீஸ் சூரத் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    மது போதையில் விபத்தை ஏற்படுத்திய நபர் சந்தோஷ் (வயது 31) ஆகும். இவர் டெல்லியை அடுத்த துவாரகா ஜெஜெ காலனியை சேர்ந்தவர் ஆவர். துவாரகா நகர் செக்டார் 1 பகுதியில் இந்த சம்பம் அரங்கேறியதாக காவல் துறை துணை ஆணையர் ஹர்ஷா வர்தன் தெரிவித்தார்.

    விபத்தை ஏற்படுத்திய சந்தோஷ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக துவாரகா தெற்கு காவல் நிலையத்தை சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

    • அண்ணாநகர் போக்குவரத்து கட்டுப்பாட்டறை கேமரா மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் கையாள்வதற்காக மேலும் இரண்டு தனித்தனி அழைப்பு மையங்கள் பின்னர் சேர்க்கப்பட்டன.
    • ஆக மொத்தம் இந்த 12 காவல் அழைப்பு மையங்களின் 84 நாட்கள் செயல் திறன் 11.4.2022 முதல் 3.7.2022 வரை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை போக்குவரத்து காவல்துறை 2018 மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட்டது.

    ஆரம்ப காலங்களில் அபராதம் செலுத்துவது அதிகமாக இருந்த போதிலும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாததால் அது காலப்போக்கில் தேக்கமடைந்தது.

    இந்த தேக்க நிலையை சரி செய்ய சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் அழைப்பு மையங்கள் முறையை அறிமுகப்படுத்த முடிவுசெய்தனர்.

    சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் கடந்த 11.4.2022 அன்று 10 அழைப்பு மையங்களை திறந்து வைத்தார்.

    அண்ணாநகர் போக்குவரத்து கட்டுப்பாட்டறை கேமரா மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் கையாள்வதற்காக மேலும் இரண்டு தனித்தனி அழைப்பு மையங்கள் பின்னர் சேர்க்கப்பட்டன.

    ஆக மொத்தம் இந்த 12 காவல் அழைப்பு மையங்களின் 84 நாட்கள் செயல் திறன் 11.4.2022 முதல் 3.7.2022 வரை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த 12 காவல் அழைப்பு மையங்களிலிருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

    தவறும் பட்சத்தில் மேற்படி வழக்குகள் மெய்நிகர் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    இந்த முயற்சியின் காரணமாக கடந்த 84 நாட்களில் 2,19,742 பழைய வழக்குகளுக்கான (மார்ச் 2019 முதல் பதியப்பட்ட பழைய வழக்குகள்) அபராதத் தொகை ரூ. 3,31,49,275 விதிமீறிய வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது.

    இதில் ஒரு பகுதியாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அழைப்புச் செய்து 1,674 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.1,68,60,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் சராசரியாக ரூபாய் 10,000 அபராதம் செலுத்தி உள்ளனர்.

    ஆக மொத்தம் 2,21,416 பழைய வழக்குகளில் ரூபாய் 5,00,09,275 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் 2,58,835 புதிய வழக்குகளுக்காக ரூபாய் 6,31,58,750 அபராதமாக வசூலிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் இந்த 84 நாட்களில் 4,80,251 வழக்குகளில் மொத்தம் ரூ.11,31,68,025 அபராத தொகையாக வசூலித்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×