அபராதத்தை தவிர்க்க போலீஸ் மீது காரை ஏற்றிய நபரால் பரபரப்பு

டெல்லியில் மது போதையில் போக்குவரத்து போலீஸ் மீது கார் ஏற்றிய நபர் கைது. விபத்தில் சிக்கிய போலீசாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அபராதத்தை தவிர்க்க போலீஸ் மீது காரை ஏற்றிய நபரால் பரபரப்பு
Published on

வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த இரண்டு போக்குவரத்து போலீசார் மீது மது போதையில் வந்த நபர் காரை ஏற்றியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார். மது போதையில் போலீசார் மீது காரை ஏற்றிய நபர் தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்யப்பட்டார்.

போக்குவரத்து போலீசாரிடம் அபராதம் செலுத்தாமல் தப்பிக்க நினைத்து, மது போதையில் வந்த ஆசாமி காரை கொண்டு மோதியிருக்கிறார். விபத்தில் சிக்கிய தலைமை கான்ஸ்டபில் விகாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் விபத்தில் சிக்கிய மற்றொரு போலீஸ் சூரத் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மது போதையில் விபத்தை ஏற்படுத்திய நபர் சந்தோஷ் (வயது 31) ஆகும். இவர் டெல்லியை அடுத்த துவாரகா ஜெஜெ காலனியை சேர்ந்தவர் ஆவர். துவாரகா நகர் செக்டார் 1 பகுதியில் இந்த சம்பம் அரங்கேறியதாக காவல் துறை துணை ஆணையர் ஹர்ஷா வர்தன் தெரிவித்தார்.

விபத்தை ஏற்படுத்திய சந்தோஷ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக துவாரகா தெற்கு காவல் நிலையத்தை சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com