search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேனா நினைவுச் சின்னம்"

    • நினைவுச் சின்னத்தை 3 பகுதிகளாக கட்டவும் திட்டமிட்டுள்ளனர்.
    • பேனா நினைவுச் சின்னம் 30மீட்டர் உயரமும், 3 மீட்டர் விட்டமும் கொண்டதாக 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

    இதற்காக மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல்மேல் நடந்து சென்று பேனா நினைவுச் சின்னத்தை பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    மேலும் இந்த நினைவுச் சின்னத்தை 3 பகுதிகளாக கட்டவும் திட்டமிட்டுள்ளனர்.

    முதலில் கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கப்படுகிறது. இதில் கடல் மீது 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரையமைப்பாக அமைக்கப்படும்.

    அடுத்து பேனா நினைவுச் சின்னம் 30மீட்டர் உயரமும், 3 மீட்டர் விட்டமும் கொண்டதாக 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். இந்த நினைவுச் சின்னம் அமைக்க நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பல அமைப்புகள் ஆதரவும் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையில் மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் முழு அனுமதியும் இப்போது கிடைத்துவிட்டது. இருப்பினும் 15 நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

    கட்டுமான பணிகளுக்காக எந்தவொரு நிலையிலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தக்கூடாது. திட்டத்தைச் செயல்படுத்தும்போது நிபுணர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லாச் சான்று பெற வேண்டும். ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. ஏதேனும் தவறான போலியான தகவல் இருப்பது தெரியவந்தால், அனுமதி வாபஸ் பெறப்படும். இந்த அனுமதியானது தேசிய பசுமை தீர்ப்பாயம் தெற்கு மண்டலத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் இடம் பெற்றுள்ளன.

    பேனா நினைவுச் சின்னத்துக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் இனி அடுத்த கட்டமாக கட்டிட பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடும் பணியில் பொதுப் பணித்துறை ஈடுபட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுக்குள் பேனா நினைவுச் சின்னத்தை கட்டி முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். நினைவுச் சின்னத்தை வடிவமைக்க சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பிற நிபுணர்களுடன் கலந்தாலோ சிக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியது.
    • அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் பணிகளை விரைவில் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டு. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

    பேனா நினைவுச் சின்னம் தொடர்பான தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் வழங்கிய நிலையில், இப்போது மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியிருக்கிறது. சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு விதித்த அதே 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.

    தேவையான அனைத்து அனுமதியும் கிடைத்திருப்பதால் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    • பூங்காவில் இந்த பேனா சின்னம் வைப்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.
    • 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பூங்காவில் 10 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக 10 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே நகராட்சி சார்பில் ரூ.9¼ கோடியில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பூங்காவில் 10 அடி உயரத்தில் பேனா சிலை வடிவத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலையை சுற்றி நீரூற்று போன்றும், வட்ட வடிவில் நீரில் மீன்கள் காணப்படும் வகையில் அதன் மேல் சிறிய பாலம் போன்று அமைத்து பேனா அருகே மக்கள் சென்று பார்க்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

    இந்த பேனா சின்னம் குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் பேனா ஒரு அடையாள சின்னமாகவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் இந்த பேனா சின்னம் வைப்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது' என்றனர்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவு சின்னமாக சென்னையில் கடலில் பேனா நினைவுச் சின்னம் வைக்க திட்டமிட்டு அதற்கு ஆதரவும், எதிர்ப்பு இருந்து வருகிற நிலையில், தற்போது புதுக்கோட்டையில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்துள்ளது.
    • கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார்.

    அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் கட்டி முடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதையொட்டி கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் இந்த திட்டத்திற்கான வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை மற்றும் அதன் செயல்முறை திட்ட சுருக்கம் அவசர கால செயல் திட்டங்கள், பேரிடர் மீட்பு திட்டம் குறித்த விவரங்கள் சென்னை கலெக்டர் அலுவலகம், கிண்டி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங் அலுவலகம், ஒவ்வொரு தாசில்தார் அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

    கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் இந்த திட்ட விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • இந்த திட்டத்திற்கு பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டும்.
    • மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற வேண்டும்.

    சென்னை மெரினாவில் அமைக்கப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது.

    ரூ.80 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த நினைவுச் சின்னத்திற்கு சென்றடையும் வகையில் 290 மீட்டர் தூரத்திற்கு கடற்கரையிலும், 360 மீட்டர் தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி கோரி தமிழ்நாடு பொதுப்பணித்துறை சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் பரிசீலித்து ஒப்புதல் வழங்கியது.

    இந்நிலையில் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு முதல் கட்ட அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுமக்களிடம் இந்த திட்டத்திற்காக கருத்துகளை கேட்ட பின்னர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதால் யாருக்கு என்ன லாபம்.
    • நினைவுச் சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து நினைவு சின்னத்தை அமைத்து கொள்ளவும்.

    திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு ரூ.80 கோடி செலவில் பிரமாண்டமான பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க கூடாது.

    ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதால் யாருக்கு என்ன லாபம்.

    நினைவு சின்னத்திற்காக செலவு செய்யும் பணத்தை உள்கட்டமைப்பு வசதி, காலை வசதி, கல்வி வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி, விவசாய வளர்ச்சி போன்றவற்றில் பயன்படுத்தினால் மக்கள் அதனை வரவேற்பார்கள்.

    கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற பல நினைவு சின்னங்கள் உள்ள நிலையில் தற்போது 80 கோடி ரூபாய் செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பது அவசியமற்றது.

    நினைவுச் சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து நினைவு சின்னத்தை அமைத்து கொள்ளவும்.

    மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக ஆக்கபூர்வமான பணிகளுக்கு அதனை பயன்படுத்த வேண்டும்

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    ×