search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் பக்தர்கள்"

    • இன்று ஆடி 4-வது செவ்வாய்
    • சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்

    கன்னியாகுமரி :

    அம்மன் கோவில்களில் ஆடி மாதம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடும் ஒன்று. குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெறும் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் பெருமளவு திரள்வார்கள். அப்போது பெண் பக்தர்கள் அம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    அதேபோல இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் களில் ஆடி 4-வது செவ்வாய் சிறப்பு வழிபாடு இன்று நடந்தது. கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், தாழக்குடி அவ்வையாரம்மன் கோவில், பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், முத்தாரம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி 4-வது செவ்வாயை யொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன.

    ஆடி 4-வது செவ்வாயையொட்டி தாழக்குடியில் உள்ள அவ்வையாரம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பகவதி அம்மன் கோவி லில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விசுவ ரூபதரிசன மும் நடந்தது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் அதைத்தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு உஷபூஜையும், உஷ தீபாராதனையும் நடந்தது.

    காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 11 மணிக்கு அம்ம னுக்கு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை யும், இரவு 7.30 மணிக்கு மலர் முழுக்கு விழாவும், 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை மற்றும் நிவேத்திய பூஜையும் நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி பல்லக் கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிர காரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராத னையும் நடக்கிறது.

    • இன்று ஆடி 2-வது செவ்வாய்
    • சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்

    கன்னியாகுமரி :

    அம்மன் கோவில்களில் ஆடி மாதம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடும் ஒன்று. குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் களில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு இன்று நடந்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வடி வீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கி யம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், தாழக்குடி அவ்வை யாரம்மன் கோவில், பெரு மாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், முத்தாரம்மன் கோவில்கள் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி 2-வது செவ்வாயையொட்டி இன்று சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன.

    தாழக்குடியில் உள்ள அவ்வையாரம்மன் கோவி லில் பெண் பக்தர்கள் கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைத்து வழி பட்டார்கள். கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழி பாட்டில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி செவ்வாயையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விசுவரூப தரிசன மும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் அதைத் தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.

    7 மணிக்கு ஸ்ரீபலி பூஜை யும், நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு உஷ பூஜையும், உஷ தீபாராதனை யும் நடந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு அம்மனுக்கு வைரகிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக் கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாரா தனை நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு ஸ்ரீபலிபூஜை மற்றும் நிவேத்திய பூஜை நடக்கிறது.

    பின்னர் அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந் தந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    • ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் அம்மன் கோவிலில் பெண்கள் குவிந்தனர்.
    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை

    தமிழ் மாதங்களில் அம்ம–னுக்கு மிகவும் உகந்த மாத–மாக கருதப்படுவது ஆடி மாதமாகும். ஆடி மாதங்க–ளில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடை–பெறும். அதில் ஆலயங்களில் கூழ்வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல் உள் ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்.

    இன்று ஆடி முதல் வெள் ளிக்கிழமை என்பதால் மது–ரையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்க–ளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவி–லில் காலையில் நீண்ட வரி–சையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோவில்,

    மறவர் சாவடி தசகாளி–யம்மன் கோவில், முடக்கு சாலை காளியம்மன் கோவில், சொக்கலிங்க நகர் சந்தன மாரியம்மன் கோவில், பழங்காநத்தம் நேரு நகர் அங்காள ஈஸ்வரி கோவில், புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் அம்ம–னுக்கு சிறப்பு அலங்கா–ரங்கள் செய்யப்பட்டு தீபா–ராதனை காண்பிக்கப்பட்டது.

    அழகர்கோவில் நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலில் அம்மன் பல் வேறு வண்ண மலர்க–ளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித் தார்.

    இதனால் இக்கோவில்க–ளில் கூட்டம் அலைமோதி–யது. திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்ம–னுக்கு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலிலுக்கு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி சங்க–ரன்கோவில், திருவேங்கடம் தூத்துக்குடி, விளாத்தி குளம், கோவில்பட்டி போன்ற பல ஊர்களில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் வந்திருந்தனர்.

    அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், அம்ம–னுக்கு தீச்சட்டி, அங்கப்பி–ரதட்சணம், பால்குடம், ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில், மாவி–ளக்கு போன்ற நேர்த்திக்க–டனை எடுத்து செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில், காரைக்குடி கொப்பு டையம்மன் கோவில், மடப்புரம் காளி–யம்மன் கோவில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.
    • இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக்கோவிலுக்கு கொண்டு வருதல்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்க ளில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.இந்த வருடத்தின் மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.

    நேற்று 8-ம் நாள் விழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நண்பகல் 12.30 மணிக்கு நடுவூர்க்கரை சிவசக்தி திருக்கோவில் பக்தர்கள் மாவிளக்கு பவனி வருதல், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மாவட்ட பக்தர்கள் காலை முதலே மண்டைக்காட்டில் குவிந்தனர். அவர்கள் கோவிலை சுற்றியுள்ள தோப்புகளில் நண்பர்கள், உறவினர்கள் என கூட்டம் கூட்டமாய் பொங்கலிட்டு மற்றும் சமையல் செய்து அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர்.

    பக்தர்களின் வசதிக் காக நாகர்கோவில், களி யக்காவிளை, மார்த் தாண்டம், தக்கலை, குமார கோவில், குலசேகரம் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டன. நேற்று பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கோவில் வளாகம், பொங்கலிடும் பகுதி, கடற்கரை, கடற்கரை சந்திப்பு ஆகிய பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் அருகில் உள்ள குளச்சல், கருங்கல், திங்கள்நகர், மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, ராஜாக்கமங்கலம் ஆகிய ஊர்களிலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15 மணிக்கு செம்பொன்விளை சிராயன்விளை பக்தர்களின் சந்தனகுடம் பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோவில்ம வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசை, 8 மணிக்கு பக்தி இன்னிசை சொற்பொழிவு, 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி ஆகியவை நடந்தது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 8 மணிவரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், 8 மணி முதல் மாலை 3.30 மணிவரை சொற்பொழிவு போட்டி, 3.30 மணிமுதல் 5 மணிவரை தெய்வீக ஸத்ஸங்க பக்தி இன்னிசை, 5 மணிமுதல் இரவு 7 மணிவரை நாட்டிய நிகழ்ச்சி, 7.30 மணிமுதல் 9 மணிவரை அகில திரட்டு விளக்கவுரை, இரவு 9 மணிமுதல் மாபெரும் அய்யாவழி நிகழ்ச்சி, 10.30 மணிமுதல் பக்தி இன்னிசை சொற்பொழிவு, 10.30 மணிக்கு மேல் புராண நாட்டிய நாடகம் ஆகியவை நடந்தது.

    இன்று இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் பெரிய சக்கர தீவட்டி வீதி உலா வருதலும் நடக்கிறது. விழாவின் பத்தாம் திருவிழாவான நாளை (14-ந் தேதி) அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளலும் 4.30 மணிக்கு அடி யந்திர பூஜையும், 6 மணிக்கு குத்தி யோட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதலும் 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக்கோவிலுக்கு கொண்டு வருதலும் இரவு 12 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் ஒடுக்கு பூஜை நடக்கிறது.

    • அவ்வையார் ஆலயத்தில் கொழுக்கட்டை படைத்து வழிபாடு
    • அனைத்து ஆலயங்களிலும் பெண் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன்கோவில்களில் முதல் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு இன்று நடந்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டை க்காடு பகவதி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில்.

    நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், தாழக்குடி அவ்வையாரம்மன் கோவில், பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், முத்தாரம்மன் கோவில்கள் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும்விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன. அனைத்து ஆலயங்களிலும் பெண் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தமிழ்நாட்டில் அவ்வையார்அம்மனுக்கு தனிசன்னதி ஆரல்வா ய்மொழி அருகே தாழக்குடி பக்கம் உள்ளது.

    ஆடிமுதல்செவ்வாய்யை முன்னிட்டு இந்த ஆலயத்தில் பக்தர்கள் குடும்பங்களுடன் திரண்டு கூழ், கொழுக்கட்டை படை த்தும் வழிபாடு செய்தனர்.கேரளா பக்தர்கள் அதிக அளவில்வந்தனர்.அம்மனுக்கு காலையில் கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி செவ்வாயை யொட்டிஇன்று அதிகாலை4-30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும்விசுவரூப தரிசன மும் நடந்தது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் அதைத் தொடர்ந்து 6 மணிக்கு தீபாராத னையும் நடந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்குஎண்ணெய், பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், களபம், சந்தனம், குங்கும ம்மற்றும்புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11மணிக்கு அம்மனுக்கு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது.

    ×