search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று ஆடி முதல் செவ்வாய் அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    X

    இன்று ஆடி முதல் செவ்வாய் அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    • அவ்வையார் ஆலயத்தில் கொழுக்கட்டை படைத்து வழிபாடு
    • அனைத்து ஆலயங்களிலும் பெண் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன்கோவில்களில் முதல் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு இன்று நடந்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டை க்காடு பகவதி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில்.

    நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், தாழக்குடி அவ்வையாரம்மன் கோவில், பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், முத்தாரம்மன் கோவில்கள் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும்விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன. அனைத்து ஆலயங்களிலும் பெண் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தமிழ்நாட்டில் அவ்வையார்அம்மனுக்கு தனிசன்னதி ஆரல்வா ய்மொழி அருகே தாழக்குடி பக்கம் உள்ளது.

    ஆடிமுதல்செவ்வாய்யை முன்னிட்டு இந்த ஆலயத்தில் பக்தர்கள் குடும்பங்களுடன் திரண்டு கூழ், கொழுக்கட்டை படை த்தும் வழிபாடு செய்தனர்.கேரளா பக்தர்கள் அதிக அளவில்வந்தனர்.அம்மனுக்கு காலையில் கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி செவ்வாயை யொட்டிஇன்று அதிகாலை4-30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும்விசுவரூப தரிசன மும் நடந்தது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் அதைத் தொடர்ந்து 6 மணிக்கு தீபாராத னையும் நடந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்குஎண்ணெய், பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், களபம், சந்தனம், குங்கும ம்மற்றும்புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11மணிக்கு அம்மனுக்கு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது.

    Next Story
    ×