search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சிக்கொல்லி மருந்து"

    • 6 மருந்துகளுக்கு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டது.
    • 1,220 லிட்டர் அளவுக்கு மருந்து விற்பனைக்கு இருந்தது.

    உடுமலை :

    விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்கும் நோக்கில் நச்சு த்தன்மை நிறைந்த பூச்சிக் கொல்லி மருந்து களான மோனோகுரோ ட்டோபாஸ், புரோபெனோ பாஸ், அசிபேட், சைபர்மெ த்ரின், குளோர்பைரிபாஸ் என 6 மருந்துகளுக்கு அரசு தடை விதித்து அரசாணை வெளி யிட்டது.

    ஆனால் அபாயக ரமான பூச்சி க்கொல்லி மருந்துகளை அரசு தடை செய்த போதும் திருப்பூரில் உள்ள உரக்கடைகளில் அவற்றின் விற்பனை தொடர்கிறது என்ற புகார் எழுந்துள்ளது. இது குறித்து விவசாய சங்கத்தினர் சிலர் கூறியதாவது:- விவசாயிகளின் பாது காப்பு கருதி பூச்சிக்கொல்லி மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் சில கடைகளில் அவை தொ டர்ந்து விற்கப்படுகின்றன. அந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தென்னை விவசாயிகள், வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க பயன்படுத்துகின்றனர்.தென்னையில் தேங்காய் அளவு அதிகரிக்க இந்த மருந்து உதவுகிறது. சில வினியோகஸ்தர்கள், தென்னந்தோப்பு அதிகமு ள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் ஆன்லைன் வாயிலாக அத்தகைய மருந்துகளை கொள்முதல் செய்து விற்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். திருப்பூர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் மாரியப்பன் கூறியதாவது:- அரசால் தடை செய்ய ப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

    திருப்பூர் மாவட்டத்தில் 208 உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துவிற்பனைக் கடைகளில்ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அரசால் தடை செய்ய ப்பட்ட,மோனோகு ரோட்டோபாஸ் 717 லிட்டர், புரோபெனோபாஸ் 160 லிட்டர், அசிபேட் 78.35 லிட்டர் புரோபெ னோபாஸ் மற்றும் சைபர்மெத்ரின் இணைந்த மருந்து 39.2 லிட்டர்., குளோர்பைரிபாஸ் மற்றும் சைபர்மெத்ரின் இணைந்த மருந்து 53.85 லிட்டர்., குளோர்பைரிபாஸ் மருந்து 179.55 லிட்டர்., என 1,220 லிட்டர் அளவுக்கு மருந்து விற்பனைக்கு இருந்தது. அரசின் தடை உத்தரவுக்கு பின் இந்த மருந்துகளை விற்ககூடாது என உத்தரவு வழங்க ப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

    • உரம் விற்பனைக்கு மேற்பட்ட தனியார் விற்பனை கடைகள் உள்ளன.
    • சிறப்பு அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு செய்வார்கள்.

    மடத்துக்குளம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், சாகுபடிக்கு தேவையான விதை, பூச்சிக்கொல்லி மருந்து, உரம் விற்பனைக்கு 75க்கும் மேற்பட்ட தனியார் விற்பனை கடைகள் உள்ளன.

    மேலும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாகவும், உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் வினியோகிக்கப்பட்ட பப்பாளி விதைகள் போலியானது எனவும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் 3 வட்டார விதை மற்றும் உரம் விற்பனையாளர்கள், தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, விதைச்சான்று துறையினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது.

    இதில் போலி விதைகளால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளையும் விற்பனை செய்கின்றனர்.விவசாயிகள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்தும் போது விளைபொருட்களில் நஞ்சுத்தன்மை அதிகரித்து மக்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதே போல் அந்தியூர் அருகே போலி உரம் தயாரிக்கும் தொழிற்சாலை விவசாயிகளால் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அத்தகைய நிலை மீண்டும் ஏற்படக்கூடாது. தற்போதும் வேப்பம்புண்ணாக்கில் கலப்படம் செய்கின்றனர். காலாவதியான விதைகளை விற்கின்றனர்.முளைப்புத்திறன் இல்லாத விதைகளால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர். மிளகாய், கத்தரி, தக்காளி சாகுபடியில் மகசூல் பாதியாகி விட்டது.பயோ பெர்டிலைசர் என்ற பெயரில் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் பல்வேறு பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

    இதே நிலை நீடித்தால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் நஷ்டத்தால் சாகுபடியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினர்.

    விதை சான்றுத்துறை துணை இயக்குனர் சுரேஷ்ராஜன் பேசியதாவது:- தற்போது விவசாயிகள் பெரும்பாலும் வீரிய ஒட்டு ரக விதைகளையே பயன்படுத்துகின்றனர். எனவே விதை விற்பனையில் ஈடுபடுபவர்கள், உற்பத்தியாளர்களிடம் விதை வாங்கும் போது அனைத்து அம்சங்களையும் சரிபார்த்து வாங்க வேண்டும்.

    துறை சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

    1967ல் உருவாக்கப்பட்ட விதை சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது புதிய விதை சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது.எனவே வட்டார வாரியாக வேளாண் உதவி இயக்குனர்களே நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

    திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் பேசியதாவது:- விதை, உரம் விற்பனையாளர்கள், சட்டத்தின் அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும்.புதிதாக விதைகளை அறிமுகப்படுத்தும் போது தரம் குறித்த பரிசோதனைகளை செய்வது அவசியம்.தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலை எழுதி வைத்து கொண்டு விற்பனையில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.அனைத்து கடைகளிலும் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கடைகளுக்கு கடை விலை வித்தியாசம் இருக்கக்கூடாது.

    பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலுக்கு பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் குறித்து விழிப்புணர்வு தேவையாகும். எனவே வரும் காலங்களில் இதுசார்ந்த பட்டயப்படிப்பு படித்து முடிப்பவர்களுக்கே விதை மற்றும் உரம் விற்பனைக்கான உரிமம் வழங்கப்படும்.

    விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது குறித்து சிறப்பு அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு செய்வார்கள். விதிமுறை மீறல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    எவ்விதமான நேரடி தொடர்பு இல்லாமல் நடவடிக்கைகள் குறித்து தபாலில் மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே விற்பனையாளர்கள் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றாவிட்டால் பாரபட்சம் இல்லாமல் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார். தொடர்ந்து வேளாண் இணை இயக்குனர் தோட்டக்கலை சுரேஷ்ராஜன் உள்ளிட்ட பலர் பேசினர். உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி நன்றி கூறினார். இதில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டார விதை, உரம் விற்பனையாளர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • இயற்கை விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் விண்ணுவாம்பட்டு ஏரிகரையில் இயற்கை விவசாயிகள் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் வரும் 9-ந் தேதி போளூரில் மரபணு மாற்றப்பட்ட கடுகு விதையை அனுமதிக்காதே என மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    மேலும் உணவை நஞ்சாக்கும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளை தடை செய்யவும் உணவு கலப்படத்தை தடுக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் கலசப்பாக்கம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகள் மீனாட்சிசுந்தரம், லெனின், ராஜேந்திரன், சுமதி, கோபி, உமாசங்கர், பிரகலாதன், கமலநாதன்உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
    • நாமக்கல் வட்டார வேணாண் அதிகாரி இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    விவசாயிகள் பொதுவாக பூச்சி நோய்களை கட்டுப்ப டுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதனால் வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்படுகின்றது. மேலும், சுற்றுப்புற சூழலும் மாசுப்படுத்தப்படுகிறது. இதனை தவிர்க்க விவசாயி கள் தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பூச்சி / நோய்களை கட்டுப்ப டுத்தலாம்.வேம்பின் அனைத்து பாகங்களும் வேளாண்மைக்கு பயன்படுகிறது.

    தழையை உரமாகவும், மாடுகட்கு தீவனமாகவும், பூச்சிக் கொல்லியாகவும், வேப்பம் புண்ணாக்கை உரமாகவும் யூரியாவின் பயனை அதிகரிக்க வேப்பெண்ணைய்யை கலந்து பயன்படுத்தலாம். வேப்பெண்ணைய்யை தனியாகவும் இதர பூச்சி மருந்துகளுடன் கலந்தும் பூச்சிநாசினியாக பயன்படுத்தலாம்.

    வேப்பந்தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் வெகுவாக குறைந்துவிடும். வேப்பிலைகளை நெல்/சோளம் போன்ற தானியங்களுடன் கலந்து வைத்து அந்துப்பூச்சி, தானிய துளைப்பான்கள், வண்டுகள் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.

    வேப்பங்கொட்டை கரைசல் தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளிப் புழுக்கள், அசுவினிகள், தத்துப்பூச்சிகள், புகையான் இலைசுருட்டுப் புழு, ஆணைகொம்பன், கதிர் நாவாய்ப்பூச்சிக ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம். பயிர்களை தாக்கும் சாம்பல்நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலிய வைகளை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் கரைசல் பயன்படும்.

    வேப்பம் புண்ணாக்கை யூரியாவுடன் 1:5 என்ற விகிதத்தில் (அதாவது 1 பங்கு வேப்பம் புண்ணாக்கு + 5 பங்கு யூரியா) கலந்து இட்டால் யூரியாவின் சத்து, பயிருக்கு நீண்ட நாட்கள் கிடைக்க உதவுகின்றது. தழைச்சத்து வீணாவதும் குறைகின்றது.

    நொச்சி, வேம்பு, தழை கரைசல் நெற்பயிரில் இலைசுருட்டுப்புழு, குருத்துப்புழு மற்றும் கதிர்நாவாய்ப்பூச்சியினை கட்டுப்படுத்தும். வேம்பில் அசாடிரக்டின், நிம்பிசிடின் போன்ற ரசாயன பொருட்கள் இருப்பதால் பூச்சி/நோய் தடுப்பதற்கு உபயோகப்படுத்தப்படு கின்றது எனவே, எந்த வித பாதிப்பின்றி சிக்கனமாக வேம்பின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தி தாங்கள் பயிரிடும் விளைபொருட்களையும் பூச்சி நோய்களின்றி எளிதாக காப்பற்றலாம் என்று நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி கூறியுள்ளார்.

    ×