search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி ரங்கசாமி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் ரங்கசாமி தனது காரில் சட்டசபைக்கு வந்தார்.
    • அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நன்றி கூற சட்டசபைக்கு வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசுத்துறைகளில் 625 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இந்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் மேல்நிலை எழுத்தர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

    ஆனாலும் இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமைசெயலாளர் மற்றும் அதிகாரிகள், அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உதவியாளர் பணியிடங்களை மேல்நிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்பவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அதேபோல் அமைச்சக ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடமும் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நன்றி கூற சட்டசபைக்கு வந்தனர். சட்டசபைக்கு வெளியே முதலமைச்சரின் வருகைக்காக அவர்கள் காத்திருந்தனர்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி தனது காரில் சட்டசபைக்கு வந்தார். அங்கு காத்திருந்த அமைச்சக ஊழியர்கள் மனித சங்கிலி போன்று நீண்ட வரிசையில் நின்று கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தனர்.

    • அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு, புதுவை முதலமைச்சர் ரங்கசாமி விருந்தினர் தங்குமிடத்திற்கு வந்தார்.
    • விடுதிக்கு வெளியே துப்பாக்கி ஏந்தி நின்றிருந்த தமிழக போலீசார் முதலமைச்சர் ரங்கசாமிக்கு துப்பாக்கியுடன் மரியாதை செலுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை முதலமைச்சர் ரங்கசாமி முருக பக்தர். அவர் அடிக்கடி திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

    அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு விருந்தினர் தங்குமிடத்திற்கு வந்தார். மேல் சட்டையின்றி துண்டு மட்டும் அணிந்து இருந்த நிலையில் விடுதிக்கு வெளியே துப்பாக்கி ஏந்தி நின்றிருந்த தமிழக போலீசார் முதலமைச்சர் ரங்கசாமிக்கு துப்பாக்கியுடன் மரியாதை செலுத்தினர்.

    இதை ஏற்கும் வகையில் அவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில் வணக்கம் செலுத்தினார். மேல் சட்டையின்றி துண்டு-வேட்டியுடன் முதல்வர் போலீஸ் மரியாதை ஏற்ற வீடியோ எளிமையான போலீஸ் மரியாதை என குறிப்பிட்டு வைரலாகி வருகிறது.

    ×