search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.ஏ.பி. வாய்க்கால்"

    • முறைகேடாக வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் கிணறுகள் வெட்டி பாசன நீரை இரண்டுக்கு ஒரு சுற்று என்ற வீதம் நீர் திருடப்பட்டு வருகிறது.
    • கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்போது முறைகேடாக தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது.

    காங்கயம்:

    திருமூர்த்தி அணையில் இருந்து வெள்ளகோவில் வரை 126 கிலோ மீட்டர் நீளம் பி.ஏ.பி. கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்போது முறைகேடாக தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 22 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 லாரி அளவு தண்ணீர் திருடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் திருட்டின் மதிப்பை கணக்கிடுகையில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1 கோடி வரை நடந்திருக்கலாம். கால்வாயின் மொத்த தூரமான 126 கிலோ மீட்டருக்கும் கணக்கிட்டால் பல கோடி ரூபாய் வரை தண்ணீர் திருட்டு நடந்திருக்க கூடும் என காங்கயம்-வெள்ளகோவில் பி.ஏ.பி. நீர் பாசன சங்க தலைவர் பி.வேலுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும் நீர் பாசன சங்கத்தின் மூலம் போடப்பட்ட விதிமுறைகளை தாண்டி பல அடி ஆழத்திற்கு குழாய்கள் அமைத்தும், அதிக திறன் கொண்ட மோட்டார்கள் வைத்தும் கால்வாயில் பாயும் நீரை திருடுகின்றனர். முறைகேடாக வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் கிணறுகள் வெட்டி பாசன நீரை இரண்டுக்கு ஒரு சுற்று என்ற வீதம் நீர் திருடப்பட்டு வருகிறது எனவும் குற்றம் சாட்டினார். இது போன்று பல இடங்களில் பல விதமாக தண்ணீர் திருடுவதன் மூலம் கடைமடை விவசாயிகள் தண்ணீரை அனுபவிக்கும் சட்டப்பூர்வ உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீர் பாசன அதிகாரிகள், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்சாரத் துறை ஆகியோர் சேர்ந்து தண்ணீர் திருட்டை தடுத்து முறையான பாசன நீர் வினியோகம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என கோர்ட்டில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுத்து சமச்சீராக நீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. ேமலும் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் (நீர்வளத்துறை) காங்கயம்- வெள்ளகோவில் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாக பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • சி.செல்லமுத்து மற்றும் எம்.கோவிந்த சாமி ஆகியோருடன் நீர் வளத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.
    • நீர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசன வாய்க்கால்கள் வழியாக பாசன நீர் பகிர்ந்தளிக்கபட்டு வருகிறது. தற்போது மூன்றாம் மண்டல பாசனத்திற்கு பி.ஏ.பி., கால்வாய்களிலிருந்து 4-ம் சுற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு பாசனம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஒருசிலர் இந்த கால்வாய்களில் கரைகளை சேதப்படுத்தி குழாய்கள் அமைத்து கடை மடை விவசாயிகளுக்கு நீர் தட்டுபாட்டை ஏற்படுத்தும் வகையில்நீரை உறிஞ்சி நீர்திருட்டில் ஈடுபடுவதாக புகார் வந்தது.இதைத்தொடர்ந்து பாசன சங்கதலைவர்கள் சி.செல்லமுத்து மற்றும் எம்.கோவிந்த சாமி ஆகியோருடன் நீர் வளத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது உடுமலையிலிருந்து பிரியும் மைவாடி பகிர்மான கால்வாயில் கரைகளை சேதப்படுத்தி பக்கவாட்டில் துளையிட்டு நிரந்தரமாக பி.வி.சி., குழாய்களை அமைத்து ஒரு சிலர் நீர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து நீர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது உடுமலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.

    இது குறித்து நீர் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், முறைகேடாக நீர்திருட்டில் ஈடுபட்டோர் மீது புகார் அளிக்கபட்டுள்ளதாகவும் வாய்க்கால் கரைகளை சேதபடுத்தி நீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.  

    • காதாரக் கேடு நிலவி வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
    • இதர கழிவுகளை டேங்கா் லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் செல்வதும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    தாராபுரம்:

    பி.ஏ.பி.,இரண்டாம் மண்டல பாசனத்துக்காக தற்போது தண்ணீா் திறக்கப்பட்டு, விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பி.ஏ.பி.பிரதான வாய்க்கால்களில் கோழிப் பண்ணைகளில் நோய்த் தாக்குதலால் செத்துப்போன கோழிகளைக் கொண்டு வந்து போடுவதும், இதர கழிவுகளை டேங்கா் லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் செல்வதும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் சுகாதாரக் கேடு நிலவி வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

    இந்நிலையில், பி.ஏ.பி.,வாய்க்காலில் காலி மது பாட்டில்கள் குவியல் குவியலாக மிதந்து வருவது விவசாயிகளுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குண்டடம் அருகே காணிக்கம்பட்டி அருகே பாயும் நந்தவனம்பாளையம் கிளை வாய்க்காலில் திடீரென ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள் குவியல்குவியலாக மிதந்து வந்தன.

    இது குறித்து குண்டடம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: -சமீப காலமாக பிஏபி. வாய்க்கால் என்பது கழிவுகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. தண்ணீரில், செத்த கோழிகளை சாக்குகளில் கொண்டு வந்து வீசிச் செல்வதால் அந்த கோழிகள் அழுகிப் போய் துா்நாற்றத்துடன், விவசாய வயல்களுக்குள் வந்து சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்த ஆயிரக்கணக்கான காலி மது பாட்டில்கள் உடைந்து, அதன் கண்ணாடிச் சிதறல்கள் வயல்களுக்குள் வந்து விவசாய வேலை செய்வோரின் கால்களை பதம் பாா்க்கும் நிலை உள்ளது.எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு, பிஏபி. வாய்க்காலில் கழிவுகளைக் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    • பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
    • பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பல்லடம் - திருப்பூர்மெயின் ரோடு அருகில் தெற்குபாளையம் பிரிவு பகுதியில் பிராமிஸ் நகர் உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.இதன் அருகே பல்லடம் ராயர்பாளையத்திலிருந்து தெற்கு பாளையம் பிரிவில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் மெயின் வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் பிராமிஸ் நகர் வழியாக செல்கிறது.

    இந்தநிலையில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மெயின் வாய்க்காலில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பிராமிஸ் நகர் வாய்க்காலில் வந்து கொண்டு இருந்த நிலையில் கிளை வாய்க்காலில் மரம், செடி, கொடிகள் புதர்கள் மண்டி கிடந்ததால்தண்ணீர் நிரம்பி வழிந்து குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வழித்தடங்களிலும், வாய்க்கால் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    மேலும் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளிலும் வாய்க்கால் தண்ணீர் கலந்து நிரம்பி வழிகின்றது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் நகருக்குள் வந்து மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் இப்பகுதி பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    • கால்வாயின் பல இடங்களில் நீர் நிர்வாகத்திற்காக படிக்கட்டுகள் மற்றும் ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • படிக்கட்டுகளில் இருந்து தவறி கால்வாயின் தண்ணீரில் அடித்து செல்லப்படும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு 4மண்டலத்திற்கு உட்பட்ட 3.77 லட்சம் ஏக்கருக்கு பிரதான கால்வாயில் தண்ணீர் வழங்கப்படுகிறது. திருமூர்த்தி அணையிலிருந்து 128 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதான கால்வாய் (பி.ஏ.பி.)அமைந்துள்ளது.

    விநாடிக்கு 1,031 கன அடி தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த கால்வாய் 7.55 அடி ஆழமுடையதாகும். பாசனத்துக்காக, கால்வாயில் முழு கொள்ளளவில், தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. அப்போது போதிய விழிப்புணர்வு இல்லாமல், கால்வாயில் குளிப்பது, கரையை ஒட்டி வாகனங்களை நிறுத்தி கழுவுதல் உள்ளிட்ட செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். கால்வாயின் பல இடங்களில் நீர் நிர்வாகத்திற்காக படிக்கட்டுகள் மற்றும் ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இப்படிக்கட்டுகளை, துணி துவைப்பவர்கள் மற்றும் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் குளிக்கவும் பயன்படுத்துகின்றனர். அப்போது படிக்கட்டுகளில் இருந்து தவறி கால்வாயின் தண்ணீரில் அடித்து செல்லப்படும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. மேலும், தற்கொலை சம்பவங்களும் அதிக அளவு நடக்கிறது.

    கால்வாய் நீரோட்ட வேகம் மற்றும் ஆழம் குறித்த விழிப்புணர்வுக்காக பொதுப்பணித்துறை சார்பில், குறிப்பிட்ட இடங்களில் முன்பு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.பின்னர் விழிப்புணர்வு பணிகளில், தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதான கால்வாயின் தண்ணீர் வேகம் குறித்து தெரியாமல் குளிக்க செல்பவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    குறிப்பாக அணைப் பகுதியில் இருந்து வெள்ளகோவில் வரை கடந்தாண்டில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். கால்வாய் செல்லும் பகுதியை சேர்ந்த கிராமத்தினருக்கு, தண்ணீர் வேகம், இழுவை குறித்த விழிப்புணர்வு உள்ளது. ஆனால் கோவை -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பொள்ளாச்சி - தாராபுரம் மற்றும் இதர பிரதான வழித்தடங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் லாரி ஓட்டுனர்கள், பிரதான கால்வாயின் ஆழம் மற்றும் தண்ணீரின் வேகம் குறித்து தெரியாமல் குளித்து உயிரிழக்கின்றனர்.

    பெரும்பாலான இடங்களில் கால்வாய் கரை திறந்தவெளி பார் போன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்கவும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. நடப்பாண்டில் பிரதான கால்வாயில் மேலும் உயிரிழப்புகள் நிகழாமல் தடுக்க பொதுப்பணித்துறையினர் முக்கியமான இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்து, குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். வாகனங்களை அப்பகுதியில் நிறுத்தி கழுவ அனுமதிக்கக் கூடாது.

    மேலும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக பொதுப்பணித்துறை, போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அபாயமான பகுதிகளில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த எச்சரிக்கை பலகை வைத்து, கண்காணிப்புக்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதனால், உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.பி.ஏ.பி . இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாசன காலம் இன்னும் சில மாதங்கள் நீடிக்க உள்ளதால், உடனடி நடவடிக்கை தேவையாக உள்ளது.

    பி.ஏ.பி பிரதான கால்வாய் மட்டுமல்லாது பல்வேறு கிளை கால்வாய்களிலும், நீரில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. வேகமாகச்செல்லும் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் குளிப்பவர்கள் விபரீதம் தெரியாமல் நீச்சல் பழக முயற்சிப்பவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். எனவே கிளைக் கால்வாய்கள் அமைந்துள்ள பகுதியிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களுடன் இணைந்து பொதுப் பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்படுகிறது.

    மற்ற பாசன வாய்க்கால்கள் சம மட்டமாக உள்ள நிலையில், பிஏபி. வாய்க்காலில் தண்ணீர் செல்வது ஒவ்வொரு சில குறிப்பிட்ட கிலோ மீட்டருக்கு பிறகு தாழ்வாக செல்லும் வகையில் சரிவாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த கால்வாயில் நீரின் வேகம் குறித்து அறியாமலும், விடுமுறை தினங்களில் கூட்டம் கூட்டமாக வந்து குளிப்பதும் நடக்கிறது.இதில் கவனம் தவறும் போது பலர் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழக்கின்றனர். எனவே பொதுப் பணித்துறை இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×