search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி., வாய்க்காலில் குவியல் குவியலாக மதுபாட்டில்கள் -  விவசாயிகள் அதிர்ச்சி
    X

    கோப்புபடம். 

    பி.ஏ.பி., வாய்க்காலில் குவியல் குவியலாக மதுபாட்டில்கள் - விவசாயிகள் அதிர்ச்சி

    • காதாரக் கேடு நிலவி வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
    • இதர கழிவுகளை டேங்கா் லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் செல்வதும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    தாராபுரம்:

    பி.ஏ.பி.,இரண்டாம் மண்டல பாசனத்துக்காக தற்போது தண்ணீா் திறக்கப்பட்டு, விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பி.ஏ.பி.பிரதான வாய்க்கால்களில் கோழிப் பண்ணைகளில் நோய்த் தாக்குதலால் செத்துப்போன கோழிகளைக் கொண்டு வந்து போடுவதும், இதர கழிவுகளை டேங்கா் லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் செல்வதும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் சுகாதாரக் கேடு நிலவி வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

    இந்நிலையில், பி.ஏ.பி.,வாய்க்காலில் காலி மது பாட்டில்கள் குவியல் குவியலாக மிதந்து வருவது விவசாயிகளுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குண்டடம் அருகே காணிக்கம்பட்டி அருகே பாயும் நந்தவனம்பாளையம் கிளை வாய்க்காலில் திடீரென ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள் குவியல்குவியலாக மிதந்து வந்தன.

    இது குறித்து குண்டடம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: -சமீப காலமாக பிஏபி. வாய்க்கால் என்பது கழிவுகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. தண்ணீரில், செத்த கோழிகளை சாக்குகளில் கொண்டு வந்து வீசிச் செல்வதால் அந்த கோழிகள் அழுகிப் போய் துா்நாற்றத்துடன், விவசாய வயல்களுக்குள் வந்து சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்த ஆயிரக்கணக்கான காலி மது பாட்டில்கள் உடைந்து, அதன் கண்ணாடிச் சிதறல்கள் வயல்களுக்குள் வந்து விவசாய வேலை செய்வோரின் கால்களை பதம் பாா்க்கும் நிலை உள்ளது.எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு, பிஏபி. வாய்க்காலில் கழிவுகளைக் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    Next Story
    ×