search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்திரகாளி அம்மன்"

    • பத்ரகாளி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெருவில் பெரிய ஆண்டிச்சி என்கிற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பத்ரகாளி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. கோமுகி நதிக்கரையில் இருந்து பெண்கள் 108 பால்குடங்களை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சோழவந்தான் அருகே பத்திரகாளி அம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி பத்திர காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5-ந் தேதி காப்பு கட்டு வைபவமும், 21-ந் தேதி இரவு சக்தி கரகம் மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி வைகையாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று 250-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்கு ஊராட்சி கவுன்சிலர் செல்வராணி கந்தசாமி சில்வர் வாளி, சட்டிகளை பரிசாக வழங்கினார். மாலையில் முளைப்பாரியை வைகையாற்றில் கரைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    • கொடைவிழாவையொட்டி காலை ,மாலை தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
    • முப்புடாதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 24-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது.

    கடையம்:

    கீழக்கடையம் 18 பட்டி நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கோவிலில் கடந்த 24-ந்தேதி இரவு திருக்கால் நாட்டுதலுடன் விழா தொடங்கியது.

    பின்னர் தினமும் அம்மனுக்கு காலை ,மாலை தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி காலையில் வடக்கு உடையார் பிள்ளையார் கோவிலிருந்து, 18 பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக பால்குடம் மற்றும் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது.இதையடுத்து இரவு திரளான பக்தர்களின் காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மண் டக படிதாரர்கள் சார்பாக விழா நடைபெற்றது. விழாவில் கலை நிகழ்ச்சிகள், பூந்தட்டு ஊர்வலம், மாவிளக்கு ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், காலை ,மாலை தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருத்தேர் கால்நாட்டுதல், 5-ந்தேதி இரவு அம்மன் கண் திறப்பு, நேற்று (6-ந்தேதி) காலை 18 பட்டிகளுக்கு அம்மன் ஊர் விளையாடல் நடைபெற்றது. இன்று காலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மதியம் அல தீர்த்தம், அம்மன் ஊர் விளையாடல் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து இரவில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், நள்ளிரவில் அலதீர்த்தம், நையாண்டி மேளம், வாணவேடிக்கையுடன் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பின்னர் அம்மன் பூ பல்லக்கில் வீதி உலா நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி மேலக் கோவிலுக்கு மூலஸ்தானம் சென்றடைதல் நடைபெறுகிறது. பின்னர் அன்னதானம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து படப்பு தீபாராதனை, கொடைவிழா சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை கொடைவிழா நடத்தும் 4-ம் திருநாள் மண்டகபடிதாரர்கள், கீழக்கடையம் வரிதாரர்கள் மற்றும் 18 பட்டி ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    இதே போல் கடையம் முப்புடாதி அம்மன் கோவில் திருவிழா கடந்த

    24-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு தீபாராதனை, சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் கடந்த 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் தீர்த்த குடம், பால்குடம் எடுத்து வருதல், மதியம் அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பாக கலை நிகழ்ச்சிகள் மற்றும் பால்குடம் திருவிளக்கு பூஜை ,அன்னதானம் நடைபெற்றது.

    விழாவில் இன்று 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 8-ந்திருநாளில் காலையில் அபிஷேகம் மற்றும் அலகு தீர்த்தம் எடுத்து வருதல், வில்லிசை, மதியம் கொடை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து இரவு அலகு தீர்த்தம் எடுத்தல் நடைபெறுகிறது. பின்னர் முப்புடாதி அம்மனுக்கும் உற்சவருக்கும் பேச்சியம்மாளுக்கும் திருநாண் பூட்டுதல், அம்பாள் திருத்தேர்க்கு எழுந்தருளல், அதிகாலையில் திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை 3-ம் திருநாள் மண்டகப்படிதாரர்கள் மனு மயா சமுதாயத்தினர் மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

    ×