search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்தாம் வகுப்பு தேர்வு"

    • தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
    • பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

    இதையொட்டி, மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!

    நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள்.

    பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • அறைக்குள் செல்போன் போன்ற மின்னணு, மின்சார சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

    இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

    இதையொட்டி, மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    304 வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

    மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அறைக்குள் செல்போன் போன்ற மின்னணு, மின்சார சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடப்பது, விடைத்தாள் மாற்றம் செய்வது ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

    ஒழுங்கீன செயலை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். தேர்வு முடிவு மே 10-ந்தேதி வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மிக குறைந்த தேர்ச்சி விகிதம் கொண்ட மாவட்டமாக தாஹோத் இருக்கிறது.
    • மாநிலத்தின் தாய் மொழியான குஜராத்தியில் 96 ஆயிரம் மாணவர்கள் தோல்வி.

    குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    மிக குறைந்த தேர்ச்சி விகிதம் கொண்ட மாவட்டமாக தாஹோத் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமாக 40.5 சதவீதம் பேர் தான் தேர்ச்சி பெற்றனர். 272 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 1084 பள்ளிகளில் 30 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பதிவாகி இருக்கிறது. 

    இதில் மிகவும் அதிர்ச்சிகர தகவல், 157 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. மறு தேர்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 65 ஆயிரத்து 690 மாணவர்களில் 27 ஆயிரத்து 446 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிரேடு வாரியாக 6 ஆயிரத்து 111 மாணவர்கள் A1 கிரேடிலும், 44 ஆயிரத்து 480 மாணவர்கள் A2 கிரேடிலும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 652 மாணவர்கள் B2 கிரேடிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தின் தாய் மொழியான குஜராத்தியில் 96 ஆயிரம் மாணவர்களும், கணித பாடத்தில் 1 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களும் தோல்வி அடைந்தனர்.

    • 12,639 பள்ளிகளிலும், 4,025 மையங்களிலும், 182 தனியார் மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.
    • சிறை கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறன் மாணவர்கள் 13,151 பேரும் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கி நேற்று முடிந்தது. பிளஸ்-1 தேர்வு 14-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று நாளையுடன் நிறைவுபெறுகிறது.

    இதையடுத்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் (6-ந்தேதி) தொடங்குகிறது. இத்தேர்வை 9 லட்சத்து 97 ஆயிரத்து 89 பேர் எழுதுகிறார்கள். 5 லட்சத்து 1028 மாணவர்களும், 4 லட்சத்து 75 ஆயிரத்து 56 மாணவிகளும், 5 மூன்றாம் பாலினத்தவரும் தேர்வு எழுத உள்ளனர்.

    12,639 பள்ளிகளிலும், 4,025 மையங்களிலும், 182 தனியார் மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. சிறை கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறன் மாணவர்கள் 13,151 பேரும் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 தேர்வில் தமிழ் உள்ளிட்ட முக்கிய பாட தேர்வுகளை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாத நிலையில் 10-ம் வகுப்பு தேர்வில் ஆப்சென்ட் இல்லாமல் முழு அளவில் மாணவர்களை தேர்வு எழுத வைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    நாளை மறுநாள் தமிழ் தேர்வு தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 7-ந்தேதி புனித வெள்ளி அரசு விடுமுறை நாளாகும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு 10-ந்தேதி (திங்கட்கிழமை) ஆங்கிலம் தேர்வு நடக்கிறது. 13-ந்தேதி கணிதம், 15-ந் தேதி விருப்ப மொழிப்பாடம், 17-ந்தேதி அறிவியல் தேர்வும் 20-ந்தேதி சமூக அறிவியல் தேர்வுடன் நிறைவுபெறுகிறது.

    மாணவர்கள் தேர்வு கூடங்களில் முறைகேடு மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் தேர்வு மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பாளர்கள் கட்டாயம் தேர்வு மையத்திற்கு செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

    துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள் மாறாட்டம், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற சம்பவங்களை தடுக்க பறக்கும் படையினர் அவ்வப்போது தேர்வு மையங்களில் ஆய்வு செய்கிறார்கள். அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் எவ்வித தவறுக்கும் இடம் அளிக்காத வகையில் தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • 10-ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் மார்ச் 20 முதல் 24- ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.
    • தனித்தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வுகள் நடைபெறும்.

    சென்னை:

    தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தட்கல் உள்பட) ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இது தவிர 10-ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் மார்ச் 20 முதல் 24- ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.

    தனித்தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வுகள் நடைபெறும்.

    தங்களுக்குரிய தேர்வு தேதி விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

    ×