search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் வைத்து சூதாட்டம்"

    • அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் பணம், 11 இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீட்டு கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • பணம் வைத்து சூதாடியதாக நீர்குந்தி பகுதியை சேர்ந்த மணி, செல்லப்பன், கார்த்திகேயன் மற்றும் இருளர் காலனி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின் பேரில் காரிமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது காரிமங்கலம் கும்பார அள்ளி சோதனை சாவடி அருகே பணம் வைத்து சூதாடிய 12 பேரை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.

    பின்னர் விசாரித்ததில் பையம்பாட்டியானூரை சேர்ந்த முருகனாதன் (வயது43), அரசம்பட்டியை சேர்ந்த சிவலிங்கம் (50), இடைபையூரை சேர்ந்த செந்தில் (44), நரசியர் குளத்தை சேர்ந்த பழனிமுத்து (51), சின்ன கரடியூர் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை (49), பண்ணந்தூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் (43), குடிமனஅள்ளியை சேர்ந்த பரமசிவம் (39), பெரியாம்பட்டியை சேர்ந்த வடிவேல் (53) காரிமங்கலம் ஈ.பி. ஆபீஸ் பகுதியை சேர்ந்த பாலு (40), பெரியாம்பட்டியை சேர்ந்த மணி (34) பொம்மஅள்ளியை சேர்ந்த முருகேசன் (45), பெரியாம்பட்டியை சேர்ந்த பூபதி (52) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் பணம், 11 இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீட்டு கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பென்னாகரம் பகுதியில் பணம் வைத்து சூதாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன் பேரில் பென்னாகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது பணம் வைத்து சூதாடியதாக நெர்குந்தி பகுதியை சேர்ந்த மணி, செல்லப்பன், கார்த்திகேயன் மற்றும் இருளர் காலனி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • சரவணன், மாதேஷ் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்
    • சீட்டு கட்டுகள் ,ரூ.9,100 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் போலீசார் புனுகாண்டியூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த சபரி(வயது 35), அப்பு (38), மதி (31), சக்தி (37), கோவிந்தராஜ், புகழ், சரவணன், மாதேஷ் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் ,ரூ.9,100 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இவர்களில் அப்பு,மதி,சக்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • போலீசார் சூதாட்டம் நடத்திய கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.3,340 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் ஒரு கடைக்கு பின் புறம் உள்ள மரத்தடியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற போது அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரோஜ்லஷ்கர் (35), ஜாகிர் நௌரேன்காஜி (22), அஜ்கர் முல்லா (22), சகஜீஸ் மொல்லா(21), கார்தின் மொல்யா(30), சத்தம்பியாதா(30), அஜிகல்சர்தார் (22), மஜ்னா ஆழிபாஸ்க் (31) ஆகியோர் என்பதும் இவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.3,340 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ×