பணம் வைத்து சூதாடிய வடமாநிலத்தவர்கள் 8 பேர் கைது

போலீசார் சூதாட்டம் நடத்திய கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.3,340 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய வடமாநிலத்தவர்கள் 8 பேர் கைது
Published on

ஈரோடு:

பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் ஒரு கடைக்கு பின் புறம் உள்ள மரத்தடியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற போது அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரோஜ்லஷ்கர் (35), ஜாகிர் நௌரேன்காஜி (22), அஜ்கர் முல்லா (22), சகஜீஸ் மொல்லா(21), கார்தின் மொல்யா(30), சத்தம்பியாதா(30), அஜிகல்சர்தார் (22), மஜ்னா ஆழிபாஸ்க் (31) ஆகியோர் என்பதும் இவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.3,340 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com