பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது

அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் பணம், 11 இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீட்டு கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பணம் வைத்து சூதாடியதாக நீர்குந்தி பகுதியை சேர்ந்த மணி, செல்லப்பன், கார்த்திகேயன் மற்றும் இருளர் காலனி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது
Published on

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின் பேரில் காரிமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காரிமங்கலம் கும்பார அள்ளி சோதனை சாவடி அருகே பணம் வைத்து சூதாடிய 12 பேரை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.

பின்னர் விசாரித்ததில் பையம்பாட்டியானூரை சேர்ந்த முருகனாதன் (வயது43), அரசம்பட்டியை சேர்ந்த சிவலிங்கம் (50), இடைபையூரை சேர்ந்த செந்தில் (44), நரசியர் குளத்தை சேர்ந்த பழனிமுத்து (51), சின்ன கரடியூர் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை (49), பண்ணந்தூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் (43), குடிமனஅள்ளியை சேர்ந்த பரமசிவம் (39), பெரியாம்பட்டியை சேர்ந்த வடிவேல் (53) காரிமங்கலம் ஈ.பி. ஆபீஸ் பகுதியை சேர்ந்த பாலு (40), பெரியாம்பட்டியை சேர்ந்த மணி (34) பொம்மஅள்ளியை சேர்ந்த முருகேசன் (45), பெரியாம்பட்டியை சேர்ந்த பூபதி (52) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் பணம், 11 இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீட்டு கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பென்னாகரம் பகுதியில் பணம் வைத்து சூதாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் பென்னாகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது பணம் வைத்து சூதாடியதாக நெர்குந்தி பகுதியை சேர்ந்த மணி, செல்லப்பன், கார்த்திகேயன் மற்றும் இருளர் காலனி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com