search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுகர்பொருள்"

    • சுமார் 20 லாரிகள் மூலம் அரிசி மூடைகள் திங்கள் நகர் கிட்டங்கிக்கு வந்தது
    • தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

    இரணியல் :

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு கிட்டங்கியிலும் தொழிலாளர்கள் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தி ல் கல்குளம் தாலுகாவிற்கு உடையார்வி ளை, திங்கள்நகர் ஆகிய இடங்க ளில் நுகர்பொருள் வாணி கம் கிட்டங்கி உள்ளது.

    நேற்று காலை கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 லாரிகள் மூலம் அரிசி மூடைகள் திங்கள் நகர் கிட்டங்கிக்கு வந்தது. அப்போது ஒப்பந்த தினக்கூலி தொழிலாளர்கள் தங்களுக்கு ஒப்பந்த படி கூலி வேண்டும் என்று வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் லாரி ஓட்டுனர்கள் மற்றும் தினக்கூலி தொழிலா ளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை லாரி உரிமையா ளர்கள் சங்கம் சார்பில் வெளி ஆட்கள் மூலம் லாரியில் இருந்து அரிசி மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டதாக தெரி கிறது. இதனை தினக்கூலி தொழிலாளர்கள் சங்க தலைவர் மணிகண்டன் மற்றும் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

    சங்க தலைவர் மணிகண்டன் மூட்டை மீது ஏறி அமர்ந்து கொண்டு, இந்த சம்பவம் முடியும் வரை கீழே இறங்கி வர மாட்டேன் என்று கூறினார். பின்னர் இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரி வித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் சப்- இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக திங்கள் நகர் பஸ் நிலையம் அருகே உள்ள நுகர் பொருட்கள் வாணிகம் கிட்டங்கி சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நுகர்பொருள் கிட்டங்கியில் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
    • இந்த கிட்டங்கி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளதால் கிட்டங்கியை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியை அய்யப்பன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். கண்காணிப்பாளரிடம், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமாக உள்ளதா? எனவும், எந்தெந்த பகுதிக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது? எனவும், கிட்டங்கியில் உள்ள அரிசி, சீனி, பாமாயில் மற்றும் ரேஷன் பொருட்கள் தரமாக உள்ளதா? எனவும் கேட்டறிந்தார். இந்த கிட்டங்கி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளதால் கிட்டங்கியை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அதை மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். அ.தி.மு.க. நகர செயலாளர் பூமா ராஜா, பேரவை மாநில துணைச் செயலாளர் துரை தனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

    • வாகனத்தில் கடத்திய 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • அதனை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட மகாராஜபுரம் பகுதியில் வத்திராயிருப்பு தாசில்தார் உமா மகேஸ்வரி, வட்ட வழங்கல் அதிகாரி செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது.

    இது தொடர்பாக அந்த வாகனத்தை ஓட்டி வந்த விஜயனிடம் விசாரணை நடத்தினர். இதில் ரேசன் அரிசியை அவர் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் ரேசன் அரிசி கடத்திய புகாரின் பேரில் விஜயனை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    ×