என் மலர்
நீங்கள் தேடியது "நமல் ராஜபக்சே"
- எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்
- சினிமா உலகம் நிச்சயமாக அவரது இருப்பையும், துடிப்பையும் மிஸ் செய்யும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். அவரது சினிமாப்பயணம் மற்றும் திரையில் அவர் வெளிப்படுத்திய ஆற்றல் சிறப்பானவை, மறக்கமுடியாதவை. அவர் இந்தக் அத்தியாயத்தை முடித்துக்கொண்டு ஒரு புதிய பயணத்தில் அடியெடுத்து வைக்கும் வேளையில், சினிமா உலகம் நிச்சயமாக அவரது இருப்பையும், துடிப்பையும் மிஸ் செய்யும். வரவிருக்கும் அனைத்திலும் அவருக்கு வெற்றியும், நல்வாழ்த்துக்களும் மட்டுமே கிடைக்க வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது.
- தம்மிக்க பெரேரா பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் கடைசி கட்டத்தில் தனது முடிவை திரும்ப பெற்றார்.
கொழும்பு:
இலங்கையில் வருகிற செப்டம்பர் 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்குகிறது.
அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா களத்தில் உள்ளனர். இதற்கிடையே ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது குறித்து சில நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக நமல் ராஜபக்சே(வயது 38) தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு அக்கட்சி வேட்பாளருக்கு தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் கடைசி கட்டத்தில் தனது முடிவை திரும்ப பெற்றார். நமல் ராஜபக்சே முன்னாள் அதிபரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் ஆவார்.
இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.






