என் மலர்
நீங்கள் தேடியது "தொழில் முதலீட்டாளர் மாநாடு"
- விழா முடிவடைந்த பின் பிற்பகலில் விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை செல்கிறார்.
- பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரையில் நாளை நடைபெறும் தொழில் முதலீட்டு மாநாடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் பிரவீன்குமார் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கின்றனர்.
தொடர்ந்து இன்று இரவு அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல்ராஜன் இல்ல திருமண விழா கருப்பாயூரணியில் உள்ள தனியார் மகாலில் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.
பின்னர் மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் காலை 10 மணியளவில் விரகனூர் ரிங்ரோட்டில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கெட்டா அரங்கில் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். அப்போது பல்வேறு நிறுவனவங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
இதனை தொடர்ந்து மதுரை உத்தங்குடியில் அரசு சார்பில் நடைபெறும் பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதில் மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட 1 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
மேலும் இந்த விழாவில் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். விழா முடிவடைந்த பின் பிற்பகலில் விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை செல்கிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம், அவர் தங்கும் இடம், விழா நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசு தொழில்துறை சார்பில் தமிழ்நாடு வளர்கிறது தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி கோவை வருகிறார்.
தமிழ்நாடு அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியை பரவலாக்குவதில் மிக தீவிரமாக இருந்து வருகிறது.
சென்னையில் மட்டுமே வளர்ச்சி, தொழில் மேம்பாடு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவை நின்று விடக்கூடாது அனைத்து மாவட்டங்களுக்கும் இது பகிரப்பட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு தொழில்துறை சார்பில் தமிழ்நாடு வளர்கிறது (டி.என்.ரைசிங்) தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது.
முதல் மாநாடு கடந்த ஆகஸ்டு மாதம் தூத்துக்குடியிலும், 2-வது மாநாடு கடந்த செப்டம்பர் மாதம் ஓசூரிலும் நடைபெற்றது.
தூத்துக்குடியில் நடந்த முதல் மாநாட்டில் ரூ.32 ஆயிரத்து 554 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஓசூரில் நடந்த 2-வது மாநாட்டில் ரூ.24 ஆயிரத்து 307 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமானது.
இந்த நிலையில் தூத்துக்குடி, ஓசூரை தொடர்ந்து 3-வது தமிழ்நாடு வளர்கிறது(டி.என்.ரைசிங்) தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு கோவையில் நடக்க உள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி கோவை வருகிறார்.
கோவையில் நடைபெறும் 3-வது தமிழ்நாடு வளர்கிறது(டி.என்.ரைசிங்) தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் பல்வேறு புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
கோவையில் நடைபெறும் இந்த மாநாடானது மின்னணுவியல், பொது உற்பத்தி, ஜவுளி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் விதமாக நடக்க உள்ளது.
இதுதொடர்பாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறும்போது,"தொழில் நகரமாக கோவை மாறி உள்ளது. உலகளாவிய திறன் மையமாக இருப்பதால் புதிதாக தொழில் தொடங்க ஏராளமானோர் கோவைக்கு வருகிறார்கள்.
இதன்மூலம் உள்ளூர் திறமையாளர்கள், உள்கட்டமைப்பு மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் இணைப்பதற்காக உதவி வருகிறோம். அந்த வகையில் கோவையில் 3-வது தமிழ்நாடு வளர்கிறது தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது" என்றார்.
இந்த மாநாடு முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை பகுதிக்கு செல்கிறார். அங்கு ரூ.214.25 கோடி மதிப்பில் 45 ஏக்கரில் உருவாகியுள்ள செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.
முதலமைச்சர் வருகையையொட்டி அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் செம்மொழி பூங்கா திறப்பு விழாவில் பங்கேற்ற கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.கவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர்.
- மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது
- நான் முதல்வன் திட்டத்தால் இளைஞர்களுக்கு திறன்மேம்பாடு வழங்கப்படுவதாக அமைச்சர் தகவல்
சென்னை:
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை தாஜ் ஓட்டலில் வரும் 4ஆம் தேதி தொழில் மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும்.
இந்த மாநாட்டின் மூலம் ₨.3,494 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நான் முதல்வன் திட்டத்தால் இளைஞர்களுக்கு திறன்மேம்பாடு வழங்கப்படுகிறது
கடந்த ஓராண்டு காலத்தில் தொழில்துறையில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. 29 திட்டங்களுக்கு நிலம் அடையாளம் காணும் பணி நிறைவடைந்துள்ளது. 25 திட்டங்கள் அனுமதி பெறும் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






