search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வு எழுதினர்"

    • 3,283 தனித் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
    • 119 மையங்களில் 28,874 பேர் எஸ். எஸ். சி. பொது தேர்வு எழுதுகின்றனர்.

    ஈரோடு, 

    தமிழ்நாட்டில் எஸ். எஸ். எல். சி பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 20-ந் தேதி நிறைவு பெறுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.பொது தேர்வை 358 பள்ளிகளை சார்ந்த 25,591 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

    இவர்களுக்கு தேர்வு எழுத வசதியாக 113 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக 6 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் 3,283 தனித் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 119 மையங்களில் 28,874 பேர் எஸ்.எஸ்.சி.பொது தேர்வு எழுதுகின்றனர்.

    இன்று காலை தமிழ் தேர்வு நடைபெற்றது. இதற்காக காலை மாணவர்கள் சீக்கிரமாக எழுந்து குளித்து கோவில்களில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டு பள்ளிகளுக்கு தேர்வு எழுத வந்தனர். பின்னர் ஆசிரியர்களிடம் ஆசி பெற்று தேர்வு அறைக்கு சென்றனர்.

    தேர்வு காலை 10 மணிக்கு சரியாக தொடங்கியது. முதல் 15 நிமிடம் தேர்வுத்தாள்களில் வினாக்களை சரி பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 மணிக்கு முடிந்தது.

    முன்னதாக ஈரோடு உட்பட மாவட்டத்தில் 7 கட்டு காப்பு மையத்தில் வைக்கப்பட்டு இருந்த வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 162 பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. பறக்கும் படையினர் தேர்வு அறைகளை தீவிரமாக கண்காணித்தனர். மாணவ மாணவிகளுக்கு ஸ்கிரை (சொல்வதைக் கேட்டு எழுதுபவர்கள்) 685 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    இது தவிர முதன்மை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், தேர்வு கண்காணிப்பாளர் என 1,890 பேர் நியமிக்கப்பட்டி ருந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கு ஈரோடு செங்கோடம் பள்ளத்தில் உள்ள யுஆர்சி பள்ளி, கோபியில் உள்ள குருகுலம் பள்ளி, சத்தியமங்கலத்தில் ராகவேந்திரா பள்ளி என 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்த பள்ளிக்கல்வித்துறை தேதி அறிவித்ததும் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
    • தேர்வு மையங்களில் நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று நடந்த குரூப்-4 தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 201 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு மாவட்டத்தில் குரூப் - 4 தேர்வை 63 ஆயிரத்து 16 தேர்வர்கள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு அலுவலர்கள் 201 பேர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை கண்காணித்தனர்.

    மேலும் 43 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் 16 பறக்கும் படைகளும் குழுக்களாக வந்து சோதனை செய்தன. தேர்வை வீடியோவாக படம் பிடிக்க 208 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் சென்று தேர்வை ஒளிப்பதிவு செய்து கொண்டனர்.

    தேர்வர்கள் காலை சரியாக 8.30 மணிக்குள் அந்தந்த தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 9 மணிக்கு பிறகு வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வு சரியாக காலை 9:30 மணிக்கு தொடங்கி 12:30 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பின் 12.30 மணி முதல் 12.45 மணி வரை தேர்வர்கள் தங்களது ஓஎம்ஆர் சீட்டை சரியாக பூர்த்தி செய்து உள்ளார்களா என்று பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 12.45 மணிக்கு பிறகு தேர்வர்கள் அறைய விட்டு வெளியே சென்றனர்.

    கொரோனா காலகட்டம் என்பதால் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது.அதன்படி தேர்வர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி 90 சதவீதம் பேர் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். ஒரு சிலர் அருகே உள்ள கடைகளில் அவசரமாக சென்று முக கவசம் வாங்கி சென்றதை காண முடிந்தது. தேர்வில் கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் ஹால் டிக்கெட் உடன் ஆதார், டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போர்ட், போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படி தேர்வர்கள் அடையாள அட்டை கொண்டு வந்திருந்தனர். அதனை தேர்வு கண்காணிப்பாளர்கள் சோதனை செய்தனர்.

    தேர்வு மையங்களில் நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காய்ச்சல் அறிகுறி இருந்த சிலருக்கு தனி அறை ஒதுக்கி அவர்கள் அதில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். செல்போன், டிஜிட்டல் வாட்ச் கொண்டு வர அனுமதி இல்லை. ஒவ்வொரு தேர்வு மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி இருந்தது.

    மின்சார வசதி, குடிநீர் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த குரூப்- 4 தேர்வை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். குரூப்-4 தேர்வை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு இருந்தன. இன்று நடந்த தேர்வில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று எழுதினர்.

    • ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றும் 607 போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று ஈரோடு வேளாளர் கல்லூரியில் நடந்தது.
    • தேர்வுக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் காவல்துறையில் புதிதாக 444 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் மகளிர் கல்லூரி, கொங்கு, நந்தா என்ஜினீயரிங் கல்லூரி என 3 மையங்களில் நடந்தது.

    பொதுவாக விண்ண ப்பித்தி ருந்தவர்களுக்கு நேற்று காலை எழுத்து தேர்வு நடந்தது. இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது.

    இதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றும் 607 போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று ஈரோடு வேளாளர் கல்லூரியில் நடந்தது.

    இதற்காக போலீசார் காலை 8 மணி முதலே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினர். தேர்வு மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டார்.

    தேர்வு எழுத வருபவ ர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. செல்போன், டிஜிட்டல் வாட்ச் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. செல்போன் கொண்டு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் செல்போன் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    அதேபோல் அவர்களின் ஹால் டிக்கெட், ஆதார் கார்டு நகல் சரிபார்க்கப்பட்டு பின்னர் அவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வை வீடியோ மூலம் பதிவு செய்து கொண்டனர்.

    தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணியளவில் நிறைவடைந்தது. தேர்வுக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×