search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துருக்கி பத்திரிகையாளர் படுகொலை"

    பத்திரிகையாளர் கொலை விவகாரத்தில் சவுதிஅரேபியாவுடன் உறவை முறிக்க மாட்டோம், தொடர்ந்து நீடிக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். #Journalistsmurder #trump

    வாஷிங்டன்:

    சவுதிஅரேபியாவை சேர்ந்தவர் ஜமால் ஹசோக்கி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபராக இருந்து வந்தார். அவர் சவுதி அரேபிய அரச குடும்பத்தை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதினார்.

    துருக்கி நாட்டில் வசித்து வந்த அவர் அங்குள்ள சவுதிஅரேபியா தூதரகத்துக்கு சென்றார். அதன்பிறகு அவர் மாயமாகி விட்டார்.

    தூதரகத்தில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது. இந்த கொலைக்கு பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காவும் கண்டித்தது.

    சவுதிஅரேபியாவின் இளவரசர் முகமது சல்மான் தூண்டுதலால் தான் இந்த கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுசம்பந்தமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹசோக்கி கொலை இளவரசர் சல்மானுக்கு நன்றாக தெரிந்திருக்கும் என்றும் குற்றம் சாட்டினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே உறவு பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதுசம்பந்தமாக டொனால்டு டிரம்ப் கூறும்போது, சவுதிஅரேபியா அமெரிக்காவில் மிகப்பெரிய அளவிலான முதலீடுகளை செய்ய உள்ளது. அந்த நாட்டுடன் எப்போதுமே நாங்கள் உறவை மேம்படுத்த விரும்புகிறோம். எங்கள் இரு நாடுகளின் உறவும் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

    ஹசோக்கி கொலையால் சவுதிஅரேபியாவுடன் உள்ள உறவை அமெரிக்கா குறைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்த நிலையில் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Journalistsmurder #trump

    துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் குடும்பத்தாரை சவுதி மன்னரும் இளவரசரும் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். #Saudiking #Saudicrownprince #Khashoggi #Khashoggison
    ரியாத்:

    சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி(59) என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.

    இந்நிலையில், சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்கு கடந்த இரண்டாம் தேதி சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது

    அவர் அந்த தூதரகத்துக்குள் சவுதி அரேபியாவை சேர்ந்த கூலிப்படையினரால் கொல்லப்பட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வந்தது.
     
    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    உலக நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வருவதால் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சவுதி அரேபியாவை சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த படுகொலை தொடர்பாக ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு சவுதி தூதரகத்தில் பணியாற்றும் 26 பேருக்கு இஸ்தான்புல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது

    சவுதி மன்னரை விமர்சித்து எழுதிய அவரது கை விரல்களை வெட்டி, துண்டித்த பின்னர் கூலிப்படையினர் அவரை தீர்த்துக் கட்டியதாக தற்போது தெரியவந்துள்ளது. இஸ்தான்புல் புறநகர் பகுதியில் உள்ள காடுகளில் கஷோக்கியின் உடலை போலீசார் தேடி வருகின்றனர்.

    இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்குள் ஜமால் கஷோக்கி நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், சவுதி மன்னர் சல்மான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவருக்கு துணையாக செல்லும் மஹெர் அப்துலஜிஸ் முட்ரெக் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

    மேலும், லண்டன் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் கடந்த 2007-ம் ஆண்டில் மஹெர் அப்துலஜிஸ் முட்ரெக் தூதரின் முதன்மை செயலாளராக பணியாற்றிய விபரமும் கிடைத்துள்ளது.

    ஜமால் கஷோக்கி படுகொலை தொடர்பாக இன்று துருக்கி பாராளுமன்றத்தில் விரிவான தகவல்களை அளிக்கப்போவதாக அந்நாட்டின் அதிபர் தய்யிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.        

    இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் மகன் சலா கஷோக்கி மற்றும் சகோதரர் சஹேல் ஆகியோரை இன்று அரண்மனைக்கு வரவழைத்த சவுதி மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஆகியோர்  அவர்களுக்கு ஆறுதல் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இதற்கிடையே, ஜமால் கஷோக்கியின் கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரசு இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Saudiking #Saudicrownprince #Khashoggi #Khashoggison #Khashoggideath #Khashoggimurder
    துருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார். #Saudiking #Saudicrownprince #Khashoggi #Khashoggison #Khashoggideath #Khashoggimurder
    ரியாத்:

    சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி(59) என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.

    இந்நிலையில், சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி  தலைநகரான இஸ்தான்புல் நகரில்  உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்கு கடந்த இரண்டாம் தேதி சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது

    அவர் அந்த தூதரகத்துக்குள் சவுதி அரேபியாவை சேர்ந்த கூலிப்படையினரால் கொல்லப்பட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வந்தது.
     
    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    உலக நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வருவதால் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சவுதி அரேபியாவை சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த படுகொலை தொடர்பாக ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு சவுதி தூதரகத்தில் பணியாற்றும் 26 பேருக்கு இஸ்தான்புல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது

    சவுதி மன்னரை விமர்சித்து எழுதிய அவரது கை விரல்களை வெட்டி, துண்டித்த பின்னர் கூலிப்படையினர் அவரை தீர்த்துக் கட்டியதாக தற்போது தெரியவந்துள்ளது. இஸ்தான்புல் புறநகர் பகுதியில் உள்ள காடுகளில் கஷோக்கியின் உடலை போலீசார் தேடி வருகின்றனர். 

    இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்குள் ஜமால் கஷோக்கி நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், சவுதி மன்னர் சல்மான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவருக்கு துணையாக செல்லும் மஹெர் அப்துலஜிஸ் முட்ரெக் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. 

    மேலும், லண்டன் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் கடந்த 2007-ம் ஆண்டில் மஹெர் அப்துலஜிஸ் முட்ரெக் தூதரின் முதன்மை செயலாளராக பணியாற்றிய விபரமும் கிடைத்துள்ளது.

    இந்நிலையில்,  ஜமால் கஷோக்கி படுகொலை தொடர்பாக நாளை துருக்கி பாராளுமன்றத்தில் விரிவான தகவல்களை அளிக்கப் போவதாக அந்நாட்டின் அதிபர் தய்யிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.         

    இதற்கிடையே, பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் மகன் சலா கஷோக்கியை தொலைபேசி வழியாக தொடர்புகொண்ட சவுதி மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஆகியோர் ஆறுதல் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. #Saudiking #Saudicrownprince #Khashoggi #Khashoggison #Khashoggideath #Khashoggimurder
    துருக்கியில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்குள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக சவுதி மன்னரிடம் பேசப் போவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #MissingJournalist #KingSalman
    வாஷிங்டன்:

    துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்குள் பிரபல பத்திரிகையாளர் ஓருவர் கொல்லப்பட்டதாக சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.

    சவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.

    இந்நிலையில், சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில்  உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்கு கடந்த இரண்டாம் தேதி சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

    ஜமால் கஷோகியை தூதரகத்துக்கு வரவழைத்து சவுதி அரேபியாவை சேர்ந்த சிலர் அவரை தீர்த்துகட்டி விட்டு, பிரேதத்தை மறைத்து விட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கான ஆதாரமாக சவுதி தூதரகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சில கண்காணிப்பு கேமரா பதிவுகளை துருக்கி நாட்டு போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் பேசப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார். #MissingJournalist  #KingSalman
    ×