search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jonrnalist murder case"

    பத்திரிகையாளர் கொலை விவகாரத்தில் சவுதிஅரேபியாவுடன் உறவை முறிக்க மாட்டோம், தொடர்ந்து நீடிக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். #Journalistsmurder #trump

    வாஷிங்டன்:

    சவுதிஅரேபியாவை சேர்ந்தவர் ஜமால் ஹசோக்கி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபராக இருந்து வந்தார். அவர் சவுதி அரேபிய அரச குடும்பத்தை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதினார்.

    துருக்கி நாட்டில் வசித்து வந்த அவர் அங்குள்ள சவுதிஅரேபியா தூதரகத்துக்கு சென்றார். அதன்பிறகு அவர் மாயமாகி விட்டார்.

    தூதரகத்தில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது. இந்த கொலைக்கு பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காவும் கண்டித்தது.

    சவுதிஅரேபியாவின் இளவரசர் முகமது சல்மான் தூண்டுதலால் தான் இந்த கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுசம்பந்தமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹசோக்கி கொலை இளவரசர் சல்மானுக்கு நன்றாக தெரிந்திருக்கும் என்றும் குற்றம் சாட்டினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே உறவு பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதுசம்பந்தமாக டொனால்டு டிரம்ப் கூறும்போது, சவுதிஅரேபியா அமெரிக்காவில் மிகப்பெரிய அளவிலான முதலீடுகளை செய்ய உள்ளது. அந்த நாட்டுடன் எப்போதுமே நாங்கள் உறவை மேம்படுத்த விரும்புகிறோம். எங்கள் இரு நாடுகளின் உறவும் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

    ஹசோக்கி கொலையால் சவுதிஅரேபியாவுடன் உள்ள உறவை அமெரிக்கா குறைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்த நிலையில் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Journalistsmurder #trump

    ×