search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துருக்கியில் பத்திரிகையாளர் படுகொலை- சவுதி மன்னரிடம் பேசப் போவதாக டிரம்ப் அறிவிப்பு
    X

    துருக்கியில் பத்திரிகையாளர் படுகொலை- சவுதி மன்னரிடம் பேசப் போவதாக டிரம்ப் அறிவிப்பு

    துருக்கியில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்குள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக சவுதி மன்னரிடம் பேசப் போவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #MissingJournalist #KingSalman
    வாஷிங்டன்:

    துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்குள் பிரபல பத்திரிகையாளர் ஓருவர் கொல்லப்பட்டதாக சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.

    சவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.

    இந்நிலையில், சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில்  உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்கு கடந்த இரண்டாம் தேதி சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.


    ஜமால் கஷோகியை தூதரகத்துக்கு வரவழைத்து சவுதி அரேபியாவை சேர்ந்த சிலர் அவரை தீர்த்துகட்டி விட்டு, பிரேதத்தை மறைத்து விட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கான ஆதாரமாக சவுதி தூதரகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சில கண்காணிப்பு கேமரா பதிவுகளை துருக்கி நாட்டு போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் பேசப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார். #MissingJournalist  #KingSalman
    Next Story
    ×