search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக மாதிரி சட்டமன்ற கூட்டம்"

    நெல்லை, திருச்சி, சேலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாதிரி சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்று சட்டமன்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
    சென்னை:

    சட்டமன்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் மாதிரி சட்டமன்றக்  கூட்டம் கீழ்க்கண்ட நாட்களில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் நடைபெறும்.

    5-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) திருநெல்வேலி- வி.எம்.எஸ்.திருமண மண்டபம், மகாராஜா நகர், பாளையங்கோட்டையில் நடக்கிறது.

    8-ந் தேதி (வெள்ளி) திருச்சியில் கரூர் பை-பாஸ் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது.

    12-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) சேலம்- இரும்பாலை ரோட்டில் உள்ள எம்.எஸ்.வி. திருமண மண்டபத்தில் நடக்கிறது.


    சென்னையில் இன்று தி.மு.க. நடத்திய மாதிரி சடடமன்ற கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. #DMKSampleAssembly
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையில் உள்ள குளறுபடிகள் இருப்பதாக தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தி.மு.க. சட்டமன்ற கூட்டத் தொடரை புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.



    அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் இன்று மாதிரி சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். எம்எல்ஏ கருணாசும் பங்கேற்றார். திமுக கொறடா சக்கரபாணி அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டார்.

    கூட்டம் தொடங்கியதும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. #DMKSampleAssembly
    ×