search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திகம்பர் காமத்"

    • கோவா பாஜகவில், 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இணைந்தனர்.
    • காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 11ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது.

    பனாஜி:

    கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் தலைமையில்  8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

    இதையடுத்து அம்மாநில சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 11ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் காங்கிரசில் இணைந்ததால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 


    இந்நிலையில், பாஜகவில் இணைந்து பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவா மாநில முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத் கூறியுள்ளதாவது: காங்கிரசில் தலைமை எங்கே இருக்கிறது? தலைமை இருந்திருந்தால், 2017 ஆண்டு 18 எம்.எல்.ஏ.க்கள் இருந்த போது நாங்கள் ஆட்சி அமைத்திருப்போம்.

    திடீரென என்னிடம் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்கி விட்டார்கள்.இது நியாயமா? என்னை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டியது கட்சித் தலைமையின் பொறுப்பாகும்.

    ஒரு முடிவெடுக்கணும்னு நினைச்சப்போ, நான் கோவிலுக்குப் போனேன், என் தொண்டர்கள் கோபமா இருக்காங்க, இனி காங்கிரசுக்கு வேலை செய்ய வேண்டாம்னு எனக்கு சாதகமாக கோவில் பிரசாதம் வந்திருக்கு. நான் அவர்களிடம் (ஆதரவு எம்எல்ஏக்கள்) உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுங்கள், நான் உங்களுக்கு ஆதரவளிக்கிறேன் என்று தெரிவித்தேன். இப்போது காங்கிரஸ் கட்சியில் எதுவும் மிச்சமில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல், கோவாவில் ஆபரேஷன் கிச்சாட் மூலம் எம்எல்ஏக்களை பாஜக மாற்றியுள்ளாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    ×