search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிவிஎஸ் என்டார்க்"

    டிவிஎஸ் ரேசிங் நிறுவனத்தின் என்டார்க் SXR ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் என்டார்க் SXR ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய SXR ஸ்கூட்டர் வழக்கமான என்டார்க் 125 ஸ்கூட்டரை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. புதிய என்டார்க் SXR ஸ்கூட்டர் தேசிய ரேலி ஷேம்பின்ஷிப் போட்டின் நான்காவது சுற்றில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய ஸ்கூட்டரை மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அசிஃப் அலி மற்றும் ஷமிம் கான் ஓட்டுகின்றனர். டிவிஎஸ் என்டார்க் SXR ஏற்கனவே டிவிஎஸ் ரேசிங்-க்கு நல்ல வரவேற்பை பெற்ற SXR 160 மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். 

    வடிவமைப்பை பொருத்த வரை டிவிஎஸ் SXR பார்க்க என்டார்க் 125 போன்றே காட்சியளிக்கிறது. எனினும் புதிய என்டார்க் SXR புதிய டீக்கல்களை கொண்டுள்ளது. என்டார்க் SXR மாடலில் ரேஸ்-டியூன் செய்யப்பட்ட 125சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19 பிஹெச்பி பவர் வழங்குகிறது. முந்தைய என்டார்க் 125 மாடலில் 9 பிஹெச்பி பவர் வழங்குகிறது.  



    டிவிஎஸ் என்டார்க் SXR மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ரேஸ்-டியூன் செய்யப்பட்ட இன்ஜின் மட்டுமின்றி, ரேஸ்-டியூன் செய்யப்பட்ட ஹைட்ராலிக் சஸ்பென்ஷன், ரேஸ்-ஸ்பெக் கொண்ட இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட இக்னிஷன் சிஸ்டம் மற்றும் 12 இன்ச் ஆஃப் ரோடு பட்டன் டயர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    டிவிஎஸ் என்டார்க் 125 இந்தியாவின் முதல் ஸ்மார்ட்எக்சோனெக்ட் (SmartXonnect) ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இத்துடன் 55 அம்சங்களை வழங்கும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டுள்ளது.
    ×