search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிளில் பயணம்"

    2015-ம் ஆண்டு முதல் நாங்கள் சைக்கிளில் சென்று தரிசனம் செய்து வருகிறோம். சுமார் 750கி.மீ.துாரம் சைக்கிளிலேயே குழுவாக செல்கிறோம் என்றார்.

    கடலூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச்சேர்ந்தவர்கள் சங்கர், தென்றல் மாரியப்பன், அப்பணசாமி, கருப்பசாமி, சங்கர், தங்கராஜ், ஆறுமுகம், அஜய்குமார். சுமை துாக்கும் தொழி லாளியான இவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிரபக்தர்கள். இவர்கள் ஆண்டுதோறும் 21 நாட்கள் விரதமிருந்து, சைக்கிளிலேயே பயணமாக சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு விரதமிருந்து மாலை அணிந்து 8 பேர், கடந்த 11-ந் தேதி ஓடப்பட்டி பிள்ளையார்கோவிலில் இருந்து சைக்கிள் யாத்திரையை புறப்பட்டனர். 3-ம் நாளான நேற்று ராமநத்தம் வழியாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தனர். இதுகுறித்து சைக்கிள் யாத்திரை குழுவின் தலைவர் சங்கர் கூறும் போது, 2015-ம் ஆண்டு முதல் நாங்கள் சைக்கிளில் சென்று தரிசனம் செய்து வருகிறோம். சுமார் 750கி.மீ.துாரம் சைக்கிளிலேயே குழுவாக செல்கிறோம் என்றார்.

    • 568 கி.மீ. தூரம் சென்றார்
    • சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் உள்ள பாட்டாளி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 18).

    இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்து வந்தது.

    இதனால் கடந்த இரண்டரை வருடங்களாக சைக்கிள் ஓட்டுவதில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் அவர் சைக்கிள் ஓட்டி உலக சாதனை நிகழ்த்த வேண்டும் என முடிவு செய்தார்.

    இதனால் கோவையிலிருந்து சென்னை வரை சாதாரண சைக்கிளில் எங்கும் நிறுத்தாமல் செல்ல முடிவு செய்து கடந்த மாதம் 27-ம் தேதி அதிகாலை 4.12 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டார். பின்னர் 28-ந் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையை சென்றடைந்தார்.

    மேலும் இவர் வழியில் எங்கும் நிறுத்தாமல் 568 கி.மீ. தூரம் சென்றதை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

    மேலும் இதனை அப்துல் கலாம் உலக சாதனை அலுவலகத்திற்கு சென்று ஒப்படைத்தார். அங்கு அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் அவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

    சென்னையில் இருந்து ெரயில் மூலம் கோவைக்கு சென்றடைந்தார். மேலும் தற்போது மேற்கொண்ட சைக்கிள் பயணம் குறித்து உலக சாதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று ஜீவானந்தம் கூறினார்.

    ×