என் மலர்
நீங்கள் தேடியது "Travel by bicycle"
- 568 கி.மீ. தூரம் சென்றார்
- சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் உள்ள பாட்டாளி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 18).
இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்து வந்தது.
இதனால் கடந்த இரண்டரை வருடங்களாக சைக்கிள் ஓட்டுவதில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் அவர் சைக்கிள் ஓட்டி உலக சாதனை நிகழ்த்த வேண்டும் என முடிவு செய்தார்.
இதனால் கோவையிலிருந்து சென்னை வரை சாதாரண சைக்கிளில் எங்கும் நிறுத்தாமல் செல்ல முடிவு செய்து கடந்த மாதம் 27-ம் தேதி அதிகாலை 4.12 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டார். பின்னர் 28-ந் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையை சென்றடைந்தார்.
மேலும் இவர் வழியில் எங்கும் நிறுத்தாமல் 568 கி.மீ. தூரம் சென்றதை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
மேலும் இதனை அப்துல் கலாம் உலக சாதனை அலுவலகத்திற்கு சென்று ஒப்படைத்தார். அங்கு அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் அவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
சென்னையில் இருந்து ெரயில் மூலம் கோவைக்கு சென்றடைந்தார். மேலும் தற்போது மேற்கொண்ட சைக்கிள் பயணம் குறித்து உலக சாதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று ஜீவானந்தம் கூறினார்.