search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிஏஜி விசாரணை"

    ரபேல் விமான முறைகேடு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MKStalin #Rafaledeal

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடி வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்துள்ள பேட்டி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் உள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது.

     


    பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து இந்திய மக்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறார். இதன் உண்மை நிலையை அறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin #Rafaledeal

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறி வரும் காங்கிரஸ், இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி சிஏஜியிடம் இன்று முறையிட உள்ளது. #RafaleDeal #CAG
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, இந்திய விமான படைக்கு ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவதற்காக அரசு விதிகளை பின்பற்றி உலக அளவில் டெண்டர் கோரப்பட்டு ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது.



    இந்த நிலையில் 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பா.ஜனதா அதனை மறுத்துள்ளது.

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ்- பாரதிய ஜனதா இடையே வார்த்தைப்போர் முற்றியுள்ளது. இந்த நிலையில், ரபேல் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க வலியுறுத்தி மத்திய கணக்கு தணிக்கை அமைப்பிடம் (சிஏஜி) இன்று மனு அளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    அகமது பட்டேல், குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிஏஜியிடம் இன்று மனு அளிப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவர்களுடன் செல்லலாம் என தெரிகிறது. #RafaleDeal #CAG

    ×